For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மழை பெய்யும் போது தான் மேட்ச் வைப்பீங்களா? எங்க பணம் போச்சே.. கோபத்தில் ரசிகர்கள்

லண்டன் : இங்கிலாந்து - இலங்கை இடையே ஆன கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

தற்போது இலங்கையில் மழைக்காலம் என்பதால் போட்டிகள் மழையால் தடைப்பட்டு வருகின்றன.

இதனால், இங்கிலாந்து ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விளக்கம் அளித்தும் அவர்கள் கோபம் அடங்கவில்லை.

பயிற்சி போட்டிகளில் தடை

பயிற்சி போட்டிகளில் தடை

ஒருநாள் தொடர் தொடங்கும் முன்பு, இங்கிலாந்து அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்றது. அதில் முதல் போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெற்றது. இரண்டாம் பயிற்சிப் போட்டி முற்றிலும் மழையால் தடையானது. ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

மூன்று ஒருநாள் போட்டிகள்

மூன்று ஒருநாள் போட்டிகள்

அடுத்து துவங்கிய ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டு, அதில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வென்றது. மூன்றவாது ஒருநாள் போட்டி துவங்குவது மழையால் தாமதமாகி உள்ளது.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

இதனால் இங்கிலாந்தில் இருந்து இலங்கை பயணம் செய்து, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இங்கிலாந்து ரசிகர்கள் பலர் ட்விட்டரில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்து சமாளிப்பு

இதையடுத்து விளக்கம் அளித்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தன் பதிவில், "அடுத்து நடக்கவுள்ள சுற்றுப்பயணங்கள் 13 கிரிக்கெட் போர்டுகளின் அட்டவணை சம்பந்தப்பட்ட விஷயம். அதனால், போட்டிகள் நடக்கும் முக்கிய காலகட்டத்தை தாண்டியும் போட்டிகள் நடைபெற வேண்டிய அவசியம் உள்ளது" என கூறியுள்ளது. இந்த விளக்கம் பணம் செலவு செய்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. ரசிகர்கள் கோபத்தில் தான் இருக்கிறார்கள்.

Story first published: Wednesday, October 17, 2018, 18:41 [IST]
Other articles published on Oct 17, 2018
English summary
England cricket fans angry after 3 ODI’s interrupted by Rains. ECB replied in twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X