For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறக்க முடியுமா 2005 டெஸ்ட் போட்டியை... ரிப்பீட் செய்தது இங்கிலாந்து!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்டில் வெற்றிக்கு மேலும் 84 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் 2005ல் இங்கிலாந்து அணி 2 ரன்களில் வென்றதுபோல மீண்டும் வெற்றிக்கு மு

Recommended Video

மறக்க முடியுமா 2005 டெஸ்ட் போட்டி...2 ரன்களில் வென்றது இங்கிலாந்து...வீடியோ

பிர்மிங்காம்: எட்பாஸ்டனில் 2005ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான டெஸ்டில் கடைசி நேரத்தில் இங்கிலாந்து 2 ரன்களில் வென்றதை மறக்க முடியாது. அதே போன்று, இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது இங்கிலாந்து அணி.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது.

இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்தது.

அதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி வென்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. மேலும் 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா உள்ளது.

2005 டெஸ்ட் போட்டி

2005 டெஸ்ட் போட்டி

இந்த நிலையில், இதே எட்பாஸ்டன் மைதானத்தில் 2005ல் நடந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பரபரப்பான டெஸ்ட் போட்டியை சுலபமாக மறக்க முடியாது. அந்த டெஸ்டில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 308 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 182 ரன்களுக்கு சுருண்டது.

வெற்றியை நெருங்கிய ஆஸி

வெற்றியை நெருங்கிய ஆஸி

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா விளையாடியது. முதல் நிலை வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்த நிலையில் கடைசி கட்டத்தில் ஷேன் வார்னே 42, காஸ்ப்ரோவிச் 20 ரன்கள் எடுத்தனர். பிரெட் லீ ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் எடுத்தார்.

2 ரன்களில் வெற்றி

2 ரன்களில் வெற்றி

பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், 279 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டானது. இதனால், 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

தற்போது நடந்த டெஸ்ட் போட்டியில் 194 இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் அடித்த கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்கள் எடுத்து போராடினார். கடைசி கட்டத்தில் பாண்டயா கைகொடுத்தார். ஆனால் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு முன் இந்திய பேட்டிங் வரிசை எடுபடவில்லை. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது. வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருந்தும், இந்திய பேட்டிங் சரிவால், அது கை நழுவி போனது.

Story first published: Saturday, August 4, 2018, 17:38 [IST]
Other articles published on Aug 4, 2018
English summary
England looking to repeat the 2005 epic victory against india.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X