For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 ஆண்டு இருள் காலம்.. 10 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த பதவி.. பேட் கம்மின்ஸ் பின்னால் மறைந்துள்ள கதை

சென்னை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டதற்கு பின்னால் பல்வேறு முக்கிய காரணங்கள் அடங்கியுள்ளன.

அந்த அணியின் டெஸ்ட் கேப்டனாக கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டிம் பெய்ன் பாலியல் புகார் ஒன்றில் சிக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பெண் ஊழியருக்கு ஒருவருக்கு ஆபாச முறையில் மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். எனவே அவருக்கு அடுத்தபடியாக உடனடியாக ஒரு கேப்டனை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.

'முதல் போட்டியிலேயே சதம்’ ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த ஸ்ரேயாஸ்.. இதற்கு முன் யார் செய்துள்ளனர்? 'முதல் போட்டியிலேயே சதம்’ ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்த ஸ்ரேயாஸ்.. இதற்கு முன் யார் செய்துள்ளனர்?

புது கேப்டன்

புது கேப்டன்

மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து அணி தற்போது ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளது. எனவே ஆஷஸ் தொடர் முதல் பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

 தனிச்சிறப்பு

தனிச்சிறப்பு

இந்நிலையில் புதிய கேப்டன் பேட் கம்மின்ஸ் நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் தனக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாக நியமிக்கப்படுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்னர் 1950ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரே லிண்ட் வால் என்பவர் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வழிநடத்தியுள்ளார்.

 இருள் காலம்

இருள் காலம்

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமான பேட் கம்மின்ஸ், முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அப்போது அவருக்கு வயது 18 மட்டுமே ஆகும். அதன்பின்னர் சிறிது காலம் சிறப்பாக விளையாடி வந்த கம்மின்ஸுக்கு பெரும் இன்னல்களை சந்திக்க நேரிட்டது. டி20 போட்டியின் போது ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆண்டுகள் வாய்ப்புகள் ஏதுமே கிடைக்காமல் தவித்து வந்தார்.

திருப்புமுணை தந்த இந்தியா

திருப்புமுணை தந்த இந்தியா

அதன்பின்னர் அவரின் வாழ்கையில் திருப்புமுணையை ஏற்படுத்தியது இந்திய சுற்றுப்பயணம். கடந்த 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பேட் கம்மின்ஸ் மீண்டும் வாய்ப்பு பெற்றார். தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் விக்கெட் மழை பொழிந்து மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

பவுலிங் ரெக்கார்ட்

பவுலிங் ரெக்கார்ட்

அப்போது தொடங்கு தற்போது வரை ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக கம்மின்ஸ் இருந்து வருகிறார். இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 164 விக்கெட்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 111 விக்கெட்களும் டி20 க்களில் 42 விக்கெட்களையும் கம்மின்ஸ் குவித்துள்ளார்.

கேப்டன்சி செய்யும் அனுபவம்

கேப்டன்சி செய்யும் அனுபவம்

கடந்த 2019ம் ஆண்டு டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்ட போதே பேட் கம்மின்ஸ் துணை கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். எனவே கம்மின்ஸுக்கு தற்போது வரை கேப்டன்சியில் சிறந்த அனுபவமும் உள்ளது. இதுமட்டுமல்லாமல், கம்மின்ஸுக்கு கிரிக்கெட் மூளை பெற்றவர். அவரின் முடிவுகள் அவ்வளவு கட்சிதமாக இருக்கும் என முன்னாள் வீரர்களே தெரிவித்துள்ளனர். இதன் காரணங்களால் தான் முக்கியமான ஆஷஸ் தொடரின் போது கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, November 26, 2021, 12:39 [IST]
Other articles published on Nov 26, 2021
English summary
After the 11 years of struggle, Pat cummins finaly set to lead the Australia test team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X