For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை: ஏன்ய்யா, எங்களை இப்படி அலைக்கழிக்கிறீங்க: கடுப்பில் இலங்கை

By Siva

மெல்போர்ன்: உலகக் கோப்பை போட்டிகளில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக இலங்கை அணி தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாட நியூசிலாந்து சென்றது. அதன் பிறகு வியாழக்கிழமை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு வந்தது.

விளையாடி முடிந்த சிறிது நேரத்தில் மீண்டும் நியூசிலாந்து கிளம்பிச் சென்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை வெல்லிங்டனில் நடக்கும் போட்டியில் இலங்கை இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

வெல்லிங்டன் போட்டி முடிந்த பிறகு இலங்கை அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மீண்டும் ஆஸ்திரேலியா வர உள்ளது.

அசௌகரியம்

அசௌகரியம்

ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு நியூசிலாந்தில் போட்டிகளை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறி மாறி பயணம் செய்வது அசௌகரியமாக உள்ளது. மேலும் வீரர்கள் பயணத்திலேயே களைப்பாகிவிடுகின்றனர் என்று இலங்கை அணியின் மேனேஜர் மைக்கேல் டி ஜோய்ஸா தெரிவித்துள்ளார்.

ஓய்வு

ஓய்வு

வெள்ளிக்கிழமை அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் செய்ததில் நேரம் போனது. சனிக்கிழமை அவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு பயிற்சி செய்ய நேரம் இருக்காது என்றால் மைக்கேல்.

இந்தியா

இந்தியா

டோணி தலைமையிலான இந்திய அணி ஆடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டி அடிலெய்ட் நகரிலும், 2வது போட்டி மெல்போர்னிலும் நடைபெற்றது. நாளை நடக்கும் மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது.

Story first published: Friday, February 27, 2015, 17:35 [IST]
Other articles published on Feb 27, 2015
English summary
Team Sri Lanka is irritated with the world cup itinary as it has to travel a lot.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X