For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவங்க 2 பேரும் டீம்ல இல்ல.. பவுலர்களும் சரியில்ல.. தோத்துட்டோம்..! புலம்பும் அந்த அணி கேப்டன்

கொல்கத்தா: கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் இல்லாததால் தோற்றுவிட்டோம் என்று கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீசியது.

முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மான் கில் 65 ரன்கள் விளாசினார்.

தோனி சர்ச்சையில் எல்லா முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு.. ஆனா இவர் மட்டும் பகிரங்க ஆதரவு!! தோனி சர்ச்சையில் எல்லா முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு.. ஆனா இவர் மட்டும் பகிரங்க ஆதரவு!!

3 ரன்களில் சதமில்லை

3 ரன்களில் சதமில்லை

தொடர்ந்து ஆடிய டெல்லி அணியின் ஷிகர் தவான் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக வீசி, 97 ரன்கள் குவித்தார். 18.5 ஓவர்களில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் வந்தது.

கூடுதல் ரன்கள் தேவை

கூடுதல் ரன்கள் தேவை

இந்நிலையில், போட்டி முடிந்து தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த மைதானத்தில் இந்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது கிடையாது. இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க வேண்டும்.

நன்மை இல்லை

நன்மை இல்லை

பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசவில்லை. மேலும், க்றிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் இல்லாதது அணிக்கு நன்மை கிடையாது. அதனால் தோற்றுவிட்டோம். கில் தனது வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார்.

கடினமான ஒன்று

கடினமான ஒன்று

டென்லி அதிர்ச்சி அளிக்கும்படி துவக்கம் கொடுத்தார். ஆனாலும் அடுத்த போட்டியில் மீண்டு எழுந்து சிறப்பாக விளையாடுவார். ஈடன் மைதானத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த சற்று கடினமாக இருந்தது என்று கூறினார்.

Story first published: Saturday, April 13, 2019, 12:08 [IST]
Other articles published on Apr 13, 2019
English summary
Expected bowlers to perform better says Dinesh Karthik after KKR's 2nd successive loss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X