For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானில் விளையாடும் உலக அணிக்கு டுபிளசிஸ் கேப்டன்

By Staff

கராச்சி: பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் நடக்க உள்ள மூன்று டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ள உலக லெவன் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் டுபிளாசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி, 2009ல், பாகிஸ்தானுக்கு சென்றது. அப்போது, லாகூர் மைதானத்தில் இருந்து திரும்பிய இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், இலங்கை வீரர்கள் ஏழு பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களைக் கூறி, இலங்கை அணி, பாதியிலேயே நாடு திரும்பியது.

Faf du Plessis to lead World XI


அதன்பிறகு, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள எந்த அணியும் முன்வரவில்லை. கடைசியாக, 2015ல், ஜிம்பாப்வே அணி, 5 ஒரு தினப் போட்டித் தொடரில் பங்கேற்றது.

பாதுகாப்பு காரணங்களை காட்டி, பாகிஸ்தானில் விளையாட கிரிக்கெட் அணிகள் மறுத்து வந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று, அந்த நாட்டில் விளையாட இலங்கை கிரிக்கெட் அணி முன்வந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்த தொடர் இருக்கும்.

இதனிடையில், செப்டம்பர் மாதத்தில், பாகிஸ்தான் அணியுடன், உலக லெவன் அணி பங்கேற்றும் டி -20 போட்டிகள் நடக்க உள்ளன. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான உலக லெவன் அணியின் கேப்டனாக, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி கேப்டன் டுபிளாசிஸ் செயல்படுகிறார்.

உலக லெவன் அணியில், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், இங்கிலாந்து பயிற்சியாளரும் ஆன்டி பிளவர், உலக அணியின் பயிற்சியாளராக இருப்பார்.

உலக லெவன் அணி: டுபாசிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, மார்னே மார்க்கெட், டேவிட் மில்லர், இம்ரான் தாஹிர் (அனைவரும் தென்னாப்பிரிக்கா), பாலி காலிங்வுட், பென் கட்டிங் (இங்கிலாந்து), சாமுவேல் பாத்ரி, டரேன் சமி (வெஸ்ட் இன்டீஸ்), கிராண்ட் எலியாட் (நியூசிலாந்து), டிம் பாய்னே, ஜார்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா), திசாரா பெரீரா (இலங்கை).


Story first published: Friday, August 25, 2017, 22:02 [IST]
Other articles published on Aug 25, 2017
English summary
Faf du Plessis named captain of World XI, to play 3 T20 against Pakistan in Pakistan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X