For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேதர் ஜாதவுக்கு பதிலாக உலக கோப்பை அணியில் இணைகிறார் அந்த நட்சத்திர வீரர்... பிசிசிஐ அறிவிப்பு

மும்பை:உலக கோப்பை தொடரில் காயம் ஏற்பட்டால் மாற்று வீரர்களாக பயன் படுத்திக் கொள்ள மேலும் ஒரு வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர் மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா.

2019 ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வரும் 30ம் தேதி முதல் ஜூலை 14 வரை நடைபெறுகிறது. மொத்தம் 10 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. உலக கோப்பைக்கான அணிகளை அதில் பங்கேற்கும் நாடுகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.

ஒவ்வொரு நாடும் ஏற்கனவே அறிவித்துவிட்டன. இந்தியா அணியின் வீரர்கள் பட்டியல் கடந்த மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அணியில் கேப்டனாக கோலி மற்றும் ரோகித் சர்மா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் தவான், ராகுல், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், பும்ரா, புவனேஷ்குமார், முகமது சமி, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

என்னப்பா.. முக்கியமான போட்டி.. கூட்டம் பிச்சிக்கும்னு பார்த்தா.. இப்படி ஆகிப் போச்சு!! #SRHvsDC என்னப்பா.. முக்கியமான போட்டி.. கூட்டம் பிச்சிக்கும்னு பார்த்தா.. இப்படி ஆகிப் போச்சு!! #SRHvsDC

கேதர் ஜாதவ் காயம்

கேதர் ஜாதவ் காயம்

தற்போது ஐபிஎல் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. அந்த தொடரில், உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருக்கும் கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் உலக கோப்பை தொடர் விளையாட மாட்டார்.

3 பேர் அறிவிப்பு

3 பேர் அறிவிப்பு

கேதர் ஜாதவ் காயம் ஏற்பட்டு விட்டதால் உலக கோப்பை தொடரில் அவர் குணம் அடையவில்லை என்றால் விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படும் என பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்திருந்தது. உலக கோப்பை தொடரில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ள 3 வீரர்களை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது.

இஷாந்த் சர்மா தேர்வு

இஷாந்த் சர்மா தேர்வு

அவர்களுக்கு ரிசர்வ் வீரர்கள் என்று அழைப்பர். அந்த பட்டியலில் அம்பத்தி ராயுடு , ரிஷப் பன்ட் மற்றும் நவ்தீப் சனி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தற்போது அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளாரான இஷாந்த் சர்மாவை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அவர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

இளம் வீரர்களுக்கு பலம்

இளம் வீரர்களுக்கு பலம்

இளம் வீரர்களுக்கு இஷாந்த் சர்மாவின் அனுபவம் பயன்படும், அது அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும் என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள இஷாந்த் சர்மா, தற்போது தமது ஒரே குறிக்கோள் டெல்லி அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்று தருவது என்பதாகும். இந்திய அணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, May 8, 2019, 23:45 [IST]
Other articles published on May 8, 2019
English summary
Fast bowler Ishant Sharma joins world cup indian team as a reserve player, BCCI announced.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X