For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி-20 போட்டியில் விழுந்த விசித்திரமான விக்கெட்.. 'பிக் பாஷ்' தொடரில் நடந்த அதிசயம்!

ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் தொடரின் போட்டி ஒன்றில் மிகவும் வித்தியாசமான விக்கெட் ஒன்று விழுந்து இருக்கிறது.

By Shyamsundar

பிரிஸ்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் தொடர் ஐபிஎல் தொடர் தொடர் போலவே வைரலுக்கு பஞ்சம் இல்லாதது. பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர்களை உணர்ச்சி மிகுதிக்கு கொண்டு சென்று வைரஸ் காய்ச்சல் வர வைத்துவிடும்.

இந்த தொடரில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் மிகவும் வித்தியாசமான விக்கெட் ஒன்று விழுந்து இருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு அந்த ரன் அவுட் விழுந்துள்ளது.

முக்கியமாக களத்தில் இருந்த நடுவர் ஒரு நிமிடம் விக்கெட் கொடுப்பதா வேண்டாமா என்று குழம்பி இருக்கிறார். 3வது அம்பயர் விக்கெட் கொடுத்த போதிலும் இன்னும் அந்த விக்கெட் சர்ச்சையை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறது.

யார் மோதிய போட்டி

யார் மோதிய போட்டி

நேற்று நடந்த பிக் பாஷ் போட்டியில் பிரிஸ்போர்ன் ஹீட் அணியும், ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும் மோதியது. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. பிரிஸ்போர்ன் வீரர் அலெக்ஸ் ரோஸ் மிகவும் சிறப்பாக ஆடி 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார்.

அவுட்

அவுட்

இந்த நிலையில் அவர் பந்தை பவுண்டரி நோக்கி அடித்துவிட்டு ஓடினார். முதல் ரன் அடித்துவிட்டு இரண்டாவது ரன் ஓடிய போது அவர் உடலில் பந்து பட்டு ஸ்டம்பில் விழுந்தது. ஆனால் அவர் அப்போது ரீச்சை அடைந்துவிட்டார்.

ஆனாலும் ஹோபார்ட் அணி வீரர்கள் விக்கெட் கேட்டனர். குழம்பிய அம்பயர் உடனே 3 வது அம்பயரிடம் கேட்டார்.

விக்கெட் கொடுத்தார்

மூன்றாவது அம்பயர் உடனே இதற்கு விக்கெட் கொடுத்தார். ஆனால் பந்து ஸ்டம்பை தொட்டதற்காக இல்லாமல், பந்தை இவர் தடுத்தார் என்று கூறி விக்கெட் கொடுக்கப்பட்டது. பிக் பாஷ் வரலாற்றில் இப்படி பந்தை தடுத்ததாக கூறி விக்கெட் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

மோசம்

மோசம்

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் இது மிகவும் மோசமான முடிவு என்று கூறினார். இதற்கு எல்லாம் விக்கெட் கொடுக்கலாமா என்று அவர் கேட்டு இருக்கிறார்.

இது எப்படி

இவர் ''பந்து ஸ்டாம்பில் இருந்து 3 மீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் பந்து ஸ்டம்பை தாக்காது. அப்படி இருக்கையில் எப்படி இடைஞ்சல் என்று கூறி விக்கெட் கொடுக்கப்பட்டது '' என்று கேள்வி எழும்பி இருக்கிறார்.

Story first published: Thursday, January 11, 2018, 14:00 [IST]
Other articles published on Jan 11, 2018
English summary
First ever obstructing run out in took place BBL history. It happened in the match between Hobart Hurricanes and Brisbane Heat. Alex Ross, playing for Brisbane Heat, has given out for obstructing player.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X