For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் கேப்டனாகுவதை தடுத்திருப்பேன்.. அனுமதிக்கவே முடியாது.. பிசிசிஐ முன்னாள் நிர்வாகி கருத்து

மும்பை: இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருப்பதை பொறுப்பில் இருந்தால் தடுத்து இருப்பேன் என்று முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டி இருந்த கேஎல் ராகுல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் வெளியேறினார்.

இதனையடுத்து தற்காலிக கேப்டனாக 24 வயதில் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். முதல் 2 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

அவர் ஒன்னும் அவ்வளவு முக்கியமில்ல.. ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்புகள்.. கடுப்பான ஆஷிஷ் நெஹ்ரா! அவர் ஒன்னும் அவ்வளவு முக்கியமில்ல.. ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்புகள்.. கடுப்பான ஆஷிஷ் நெஹ்ரா!

ரிஷப் பண்டின் தவறு

ரிஷப் பண்டின் தவறு

எனினும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்த 2 போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது. இதில் ரிஷப் பண்டின் கேப்டன்ஷியில் தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் பட்டேலை இறக்கியது, முன்னணி வீரர்களுக்கு முழுமையாக ஓவர் தராமல் இருந்தது என தவறு செய்தாலும், பின்னர் அதனை திருத்தி கொண்டார்.

பேட்டிங்கில் அழுத்தம்

பேட்டிங்கில் அழுத்தம்

ஆனால் கேப்டன்ஷி சுமை ரிஷப் பண்டின் ஆட்டத்தை பாதிக்க, அவர் சொற்ப ரன்களில் அந்த தொடரில் ஆட்டமிழந்தார். குறிப்பாக தென்னாப்பிரிக்கா விரித்த வலையில், கொஞ்சமும் தப்பிக்காமல் ஒரு பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் சிக்கி கொண்டதாக கவாஸ்கர் உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். இது இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்ற பொறப்புக்கு ரிஷப் பண்ட் வருவதற்கு தடைக்கல்லாக மாறிவிட்டது.

தடுத்து இருப்பேன்

தடுத்து இருப்பேன்

இந்த நிலையில், 1983 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்றவரும், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான மதன் லால், ரிஷப் பண்ட்டை கேப்டனாக்குவதை தாம் தடுத்து இருப்பேன் என்று கூறினார். இந்திய அணியின் கேப்டன் பதவி என்பத பெரிய பொறுப்பு. அதனை ரிஷப் பண்ட் மாதிரி ஒரு இளம் வீரரிடம் கொடுக்க கூடாது.

முதிர்ச்சி அடைய வேண்டும்

முதிர்ச்சி அடைய வேண்டும்

ரிஷப் பண்ட் இன்னும் ஒரு வீரராக, பேட்ஸ்மேனாக முதிர்ச்சி அடைய வேண்டும். அவருக்கு இப்போது தான் 24 வயதாகிறது. அடுத்த கேப்டனாக அவரை மாற்ற அப்படி என்ன அவசரம், அவர் இங்கேயே தான் இருக்கிறார்.அவர் இன்னும் 2 ஆண்டுகள் வீரராக விளையாடி அனுபவத்தை பெற வேண்டும். தோனி ஒரு கூல் கேப்டன், விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன்.ஆனால் பண்ட், பேட்ஸ்மேனாக இன்னும் கூடுதல் முதிர்ச்சியுடன் விளையாடி அனுபவத்தை பெற்றால் கேப்டன் ஆகலாம்.

Story first published: Wednesday, June 22, 2022, 16:21 [IST]
Other articles published on Jun 22, 2022
English summary
Former BCCI selector Madan lal opposes the decision of pant appointment as captain ரிஷப் பண்ட் கேப்டனாகுவதை தடுத்திருப்பேன்.. அனுமதிக்கவே முடியாது.. பிசிசிஐ முன்னாள் நிர்வாகி கருத்து
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X