For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடை நடத்தி காலம் தள்ளும் உபுல் சந்தனா..!

By Staff

கொழும்பு: சினிமா, விளையாட்டு, அரசியல் போன்றவை, ஒரு சூதாட்டமே! ஒருவரை எப்போது மேலே தூக்கிச் செல்லும், எப்போது அதளபாதாளத்துக்கு தள்ளும் என்பது தெரியாது. ஒரு சிறிய தவறு, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் உபுல் சந்தனாவின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின், சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், சுழற்பந்து வீச்சில் கலக்கி கொண்டிருந்தபோது, அவருக்கு இணையாக பந்து வீசக் கூடிய அளவுக்கும், பேட்டிங்கிலும் கலந்து வந்தவர், உபுல் சந்தனா.

1994ல் இலங்கைக்காக, தனது முதல் ஒருதினப் போட்டியில் களமிறங்கினார். 2007 வரை அவர் இலங்கைக்காக விளையாடியுள்ளார். மொத்தம், 147 ஒருதினப் போட்டிகள், 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சிறந்த பந்து வீச்சாளர்

சிறந்த பந்து வீச்சாளர்

ஒருதினப் போட்டிகளில், 151 விக்கெட்களும், டெஸ்ட் போட்டிகளில், 37 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில், 9வது நபராக இறங்கியபோதும், 72.99 சராசரியுடன், ஒருதினப் போட்டிகளில், 1,627 ரன்கள் குவித்துள்ளார்.

சிறு தவறால் புரண்டு போன வாழ்க்கை

சிறு தவறால் புரண்டு போன வாழ்க்கை

தற்போது, 44 வயதாகும் உபுல் சந்தானா, 2004ல் செய்த ஒரு சிறு தவறு, அவருடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. முன்னாள் ஆல்-ரவுண்டர் கபில்தேவ் உருவாக்கிய, ஐ.சி.எல்., எனப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகளில், ராயல் பெங்கால் டைகர்ஸ் அணிக்காக, 2007ல் விளையாடினார்.

தடை விதித்த கிரிக்கெட் வாரியம்

தடை விதித்த கிரிக்கெட் வாரியம்

ஐ.சி.எல்.க்கு சர்வதேச கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் சங்கம் போன்றவை அங்கீகாரம் அளிக்கவில்லை. அதில் விளையாடியதால், சந்தானாவுக்கு இலங்கை கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.

வாழ்க்கைக்காக கடை

வாழ்க்கைக்காக கடை

அதனால், கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியாததால், வேறு ஜோலியும் கிடைக்காததால், தனக்கு தெரிந்த கிரிக்கெட் தொடர்புடைய, கிரிக்கெட் பொருட்களை வைக்கும் கடையை நடத்தி வருகிறார். அதுதான், அவருடைய குடும்பத்துக்கு சோறு போட்டு வருகிறது.

Story first published: Friday, August 18, 2017, 17:53 [IST]
Other articles published on Aug 18, 2017
English summary
Former Srilankan cricketer Upul Chandana runs sports shop for bread and butter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X