For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றிக் கூட்டணிக்கு “நோ”.. மறுபடி அணிக்குள் வரவே முடியாது.. கோலியின் புது பிளான்!

Recommended Video

future of chahal and kuldeep yadav is unknown| கோலி புது திட்டம் இனி இவங்களுக்கு வாய்ப்பு கிடையாது

மும்பை : இந்திய டி20 அணியில் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களாக வலம் வந்த குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் கடந்த இரு தொடர்களில் சேர்க்கப்படவில்லை.

இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்த இந்த சுழல் கூட்டணி உலகக்கோப்பை தொடருக்கு பின் ஒரேடியாக டி20 அணியில் இருந்து நீக்கினார் கேப்டன் கோலி.

அது தற்காலிகமானது இல்லை. அவர்களுக்கு இனி டி20 அணியில் இடம் கிடைக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்.

ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அவங்க கேட்ட அந்த கேள்விக்கு என்னய்யா பதில் சொல்லி வைச்சுருக்கீங்க?ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு.. அவங்க கேட்ட அந்த கேள்விக்கு என்னய்யா பதில் சொல்லி வைச்சுருக்கீங்க?

கோலியின் தேர்வு

கோலியின் தேர்வு

தோனி கேப்டனாக இருந்த வரை அஸ்வின் - ஜடேஜா கூட்டணி இந்திய அணியில் கலக்கி வந்தது. அடுத்து கோலி வந்த உடன் சாஹல் - குல்தீப் யாதவ் என்ற இரண்டு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்தார்.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

விக்கெட் கீப்பரும், மூத்த வீரருமான தோனியின் வழி காட்டுதலில் சாஹல் - குல்டீபோ யாதவ் ஜோடி விக்கெட் வேட்டை நடத்தி வெற்றிகளை வாரிக் குவித்தார்கள். போட்டிகளை வென்று கொடுக்கும் வெற்றிக் கூட்டணியாக வலம் வந்தது இந்த ஜோடி.

ஐபிஎல் மாற்றம்

ஐபிஎல் மாற்றம்

ஆனால், ஐபிஎல் தொடரில் முக்கியமான வீரரான குல்தீப் யாதவ் பார்ம் அவுட் ஆனார். முற்றிலும் சொதப்பலாக பந்து வீசி தன்னம்பிக்கை இழந்தார் குல்தீப் யாதவ். எனினும், சாஹல் ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டார்.

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி

உலகக்கோப்பை தோல்வி எதிரொலி

அடுத்து நடந்த உலகக்கோப்பை தொடரில் சாஹல் ஓரளவுக்கு விக்கெட் எடுத்தாலும், குல்தீப் யாதவ் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பந்து வீசவில்லை. உலகக்கோப்பை தொடர் போன்ற அழுத்தமான சூழலில் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை.

டி20 அணியில் நீக்கம்

டி20 அணியில் நீக்கம்

உலகக்கோப்பை முடிந்த பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருவருமே அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் இடம் பெற்றார். ஆனால், ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை. சாஹல் ஒருநாள் அணியில் மட்டும் இடம் பெற்றார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை வரும் நிலையில், இளம் வீரர்களை அடையாளம் காண வேண்டி இவர்கள் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், அடுத்து நடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் இருவரும் அணியில் இடம் பெறவில்லை.

கேள்வி

கேள்வி

ஏன் சாஹல், குல்தீப் யாதவ் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என பலரும் கேட்ட போது தான் தன் பேட்டியில் இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை திட்டம் பற்றி குறிப்பிட்டார்.

அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

இந்திய டி20 அணியில் நீண்ட பேட்டிங் வரிசை கொண்டு ஆடுவது தான் அந்த திட்டம். அதன்படி அணியில் நான்கு ஆல்-ரவுண்டர்கள் தேவை. எனவே, பேட்டிங் செய்து ரன் எடுக்க முடியாத சாஹல் மற்றும் குல்தீப் அணியில் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்தது.

எதிர்காலம் என்ன?

எதிர்காலம் என்ன?

தென்னாப்பிரிக்க தொடரின் முடிவிலும் கோலி நீண்ட பேட்டிங் வரிசை திட்டத்தை ஆதரித்து, அதை தான் பின்பற்றப் போவதாக குறிப்பிட்டார். அதனால், சாஹல், குல்தீப் யாதவ்வின் டி20 எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.

ஒருநாள் அணியும் பாதிக்கும்

ஒருநாள் அணியும் பாதிக்கும்

2020 டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணி அதிக ஒருநாள் போட்டியில் ஆடப் போவதில்லை. அதனால், ஒருநாள் மற்றும் டி20 இரண்டிலும் சாஹல், குல்தீப் யாதவ் நிலை கேள்விக் குறி தான்.

Story first published: Sunday, September 29, 2019, 11:05 [IST]
Other articles published on Sep 29, 2019
English summary
Future of Chahal and Kuldeep Yadav is unknown as Kohli moving ahead with new plan for T20 world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X