For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் வந்தா என்ன? உலகக்கோப்பையில் தோனி இருப்பார்.. ஆதரவளிக்கும் கங்குலி

கவுஹாத்தி : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிய முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்றது.

அந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கங்குலி, தோனி பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக உலகக்கோப்பையில் தோனி பங்கேற்பார் என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் அவருக்கு மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

உலகக்கோப்பை அணி தயாரா?

உலகக்கோப்பை அணி தயாரா?

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இன்னும் 17 ஒருநாள் போட்டிகளிலேயே பங்கேற்க உள்ளது. இந்த 17 போட்டிகளில் தன் சிறந்த அணியை இந்தியா அடையாளம் காண வேண்டிய கட்டாயம் உள்ளது, கடந்த சில மாதங்களாக அதிகப்படியான மாற்றங்களை இந்திய அணி சந்தித்துவிட்டது. இந்த நிலையில், இந்திய அணியில் சரியான மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை வீரர்கள் யார்?, சிறந்த மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார்? போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

தோனிக்கு போட்டி ரிஷப் பண்ட்?

தோனிக்கு போட்டி ரிஷப் பண்ட்?

இந்த நிலையில், இந்த ஆண்டு முழுவதும் பேட்டிங்கில் தடுமாறி வரும் மூத்த வீரர் தோனி உலகக்கோப்பை அணியில் பங்கேற்பார் என பொதுவாக கூறப்பட்டாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டதன் மூலம் அவரது இடத்திற்கு போட்டி வந்துள்ளது.

தோனி பற்றி கங்குலி பேச்சு

தோனி பற்றி கங்குலி பேச்சு

தோனியின் அனுபவத்துக்கு முன் ரிஷப் பண்ட் நிற்க முடியாது என்றாலும், அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியில் நிரந்தர இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. இதை பற்றி பேசிய கங்குலி, "அவர்கள் என்ன மாதிரியான அணியை உருவாக்க முயல்கிறார்கள் என புரியவில்லை. எனினும், தோனி உலகக்கோப்பையில் நன்றாக செயல்படுவார். இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் அவருக்கு முக்கியமானதாக இருக்கும். ரிஷப் பண்ட் அதிரடி பேட்ஸ்மேன் என்பதற்காக தான் அணியில் சேர்த்து இருக்கிறார்கள்" என கூறினார். அதாவது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்ற தகுதியில் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை என கூறியுள்ளார் கங்குலி.

தோனியின் சராசரி குறைவு

தோனியின் சராசரி குறைவு

தோனி இங்கிலாந்தில் ரன் குவிப்பதில் சரியாக செயல்படவில்லை. இதுவரை இங்கிலாந்து மண்ணில் தோனி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மேலும், இங்கிலாந்தில் ஆடிய 20 ஒருநாள் போட்டிகளில் தோனியின் சராசரி 38.06 மட்டுமே. அவரது ஒட்டுமொத்த சராசரி 50.61 ஆகும். தோனிக்கு இந்த பின்னடைவு இருந்தாலும், கங்குலி தோனிக்கு தன் ஆதரவை அளித்துள்ளார்.

Story first published: Monday, October 22, 2018, 18:20 [IST]
Other articles published on Oct 22, 2018
English summary
Ganguly says Dhoni will do well in World cup as Rishab Pant included in the team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X