For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: 54 பந்துகளில் 122 ரன்கள்...! டி 20 போட்டியில் அடி, வெளுத்த கெயில்.. புதிய சாதனை

Recommended Video

டி 20 போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய கெயில்.. புதிய சாதனை

கனடா: கனடா டி20 லீக் தொடரில் மான்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிராக வான்கூவர் நைட்ஸ் கேப்டன் கெய்ல் 54 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து அசத்தி இருக்கிறார்.

கனடா டி20 லீக் தொடரில் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் மற்றும் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸ் அணியும் மோதின. போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

கேப்டன் கெயில், வழக்கம் போல தமது அதிரடியால் அசத்தினார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய வைசியும் அதிரடியாக ஆடினார். வைசி வெறும் 19 பந்துகளில் 51 ரன்களை குவித்தார்.

அதிரடி ரன்குவிப்பு

அதிரடி ரன்குவிப்பு

பின்னர் வால்டன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கெயிலுடன் ஜோடி சேர்ந்த வான்டெர் டசனும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். தொடக்கம் முதலே மாண்ட்ரியல் அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்த கெயில், வெறும் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்சர்களுடன் 122 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

276 ரன்கள் குவிப்பு

அவருக்கு இணையாக ஆடிய வான்டெர் டசன் 25 பந்துகளில் 56 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கெயில், வைசி, வாண்டெர் டசன் ஆகியோரின் காட்டடியால் வான் கூவர் நைட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 276 ரன்களை குவித்தது.

அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

இதுதான் டி 20 (சர்வதேச போட்டி, உலகளவில் நடக்கும் அனைத்து லீக் தொடர்கள் உட்பட) வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர். ஆப்கானிஸ்தான் அணி அயர் லாந்துக்கு எதிராக அடித்து 278 ரன்கள் தான் உச்சப்பட்ச ஸ்கோர்.

மழை குறுக்கீடு

மழை குறுக்கீடு

வான்கூவர் நைட்ஸ் அணி இன்னும் 3 ரன்கள் எடுத்தால் அந்த சாதனையை தகர்த்திருக்கும். 277 ரன்கள் என்ற கடின இலக்கை மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி விரட்டவேயில்லை. காரணம், 2வது இன்னிங்ஸ் கனமழையால் நடக்கவே இல்லை.

Story first published: Wednesday, July 31, 2019, 13:43 [IST]
Other articles published on Jul 31, 2019
English summary
Gayle scored 122 runs in global canada t 20 league.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X