For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மேக்ஸ்வெல்லே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்.. இப்படியா ஆகனும்?

மும்பை: ஆஸ்திரேலிய அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, ஆர்சிபி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த சூழலில் ரசிகர்கள் அனைவரின் கவனமும் ஐபிஎல் தொடரின் மீது தான் உள்ளது. அதற்கேற்றார் போலவே பிசிசிஐ-ம் அப்டேட்களை வழங்கி வருகிறது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அவுட்டா ? நாட் அவுட்டா? கோபத்தில் கத்திய மேக்ஸ்வெல்.. தவறு செய்த கார்த்திக்.. முத்தம் கொடுத்த ரோகித்அவுட்டா ? நாட் அவுட்டா? கோபத்தில் கத்திய மேக்ஸ்வெல்.. தவறு செய்த கார்த்திக்.. முத்தம் கொடுத்த ரோகித்

ஆர்சிபியின் தக்கவைப்பு

ஆர்சிபியின் தக்கவைப்பு

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜேசன் பெஹண்ட்ரோஃப், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்ட 5 ஸ்டார் வீரர்களை அதிரடியாக கழட்டிவிட்டுள்ளது. இதனால் அந்த அணி மீதம் ரூ.8.75 கோடியை கையில் வைத்துள்ளது. இதனை வைத்து ஆல்ரவுண்டர்களை வாங்க திட்டமிட்டு வருகிறது.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் தான் அந்த அணிக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார் க்ளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகத்திற்கே தகவல் கூறப்பட்டுள்ளதாம். இதே போல ஆஸ்திரேலிய அணி வரும் ஃபிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதில் இருந்தும் மேக்ஸ்வெல் வெளியேறுகிறார் எனக்கூறப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

க்ளென் மேக்ஸ்வெல் சமீபத்தில் தனது நண்பரின் பிறந்தநாள் பார்டிக்காக சென்றுள்ளார். அங்கு தனது பள்ளி ஆசிரியருடன் ஓடி பிடித்து விளையாடிய போது, விபரீதமாக மேக்ஸ்வெல்லின் காலில் முறிவு ஏற்பட்டுவிட்டது. காயம் மிகவும் பலமானது என்பதால் முழுவதுமாக குணமடைய குறைந்தது 3- 4 மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய ஃபார்ம்

தற்போதைய ஃபார்ம்

கடந்த வருடமே க்ளென் மேக்ஸ்வெல் ஆர்சிபியின் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. திருமணம் காரணமாக தாமதமாக இணைந்தார். அதன்பின்னர் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 301 ரன்களை குவித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 169.10 என அட்டகாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, November 22, 2022, 17:07 [IST]
Other articles published on Nov 22, 2022
English summary
Australian Star all rounder Glenn Maxwell likely to miss the IPL 2023 after got a big injury
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X