For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு நற்செய்தி.. ஆஸ்திரேலியாவின் டேஞ்சர் வீரர் திடீர் விலகல்.. இனி ஈஸியா சுருட்டிவிடலாம்!

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் சூழலில் ரோகித் சர்மாவின் படைக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி நாக்பூரில் தொடங்கி மார்ச் 13ம் தேதி அகமதாபாத்தில் நிறையவடையவுள்ளது.

இதற்காக நாக்பூரில் ஒன்றுக்கூடியுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல 1ம் தேதியன்றே இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய வீரர்களும் பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

இந்த டெஸ்ட் தொடரின் மூலம் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் திருப்பம் ஏற்படவுள்ளது. அதாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்ட சூழலில், இந்த தொடரில் வெற்றி கண்டால் மட்டுமே இந்திய அணியால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்திய வீரர்கள் நிம்மதி

இந்திய வீரர்கள் நிம்மதி

இந்நிலையில் இந்திய அணிக்கு நிம்மதியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான கேமரூன் கிரீன் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான கிரீனுக்கு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஓய்வில் இருந்து வருகிறார்.

2 வாரங்கள் ஓய்வு

2 வாரங்கள் ஓய்வு

சமீபத்தில் கேமரூன் கிரீன் குணமடைந்துவிட்டார் என்றும் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்டின் போது கம்பேக் கொடுப்பார் என்றும் கூறப்பட்டார். ஆனால் இன்னும் விரலில் வலி உணர்வுகள் இருப்பதால் இன்னும் 2 வாரங்கள் ஓய்வு தேவை எனக்கூறப்பட்டுள்ளது. இதனை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸே கூறியுள்ளார்.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் கோடிகளை கொட்டி ஏலம் எடுக்க முயன்ற வீரர் கேமரூன் கிரீன் தான். அந்த அளவிற்கு உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அவர் 18 போட்டிகளில் விளையாடி 806 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 18 போட்டிகளில் 23 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார்.

ஆஸி,க்கு பின்னடைவு

ஆஸி,க்கு பின்னடைவு

இந்தியாவில் ஹர்திக் பாண்ட்யா எப்படியோ? அதே போல தான் ஆஸ்திரேலிய அணிக்கு கேமரூன் கீரின் உதவுகிறார். அவர் இருந்தால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக கூடுதலாக பேட்ஸ்மேனை சேர்க்கலாம். ஆனால் அவர் தற்போது இல்லாததால் ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் 11ல் பேட்டிங் ஆழம் இருக்காது எனத்தெரிகிறது.

Story first published: Friday, February 3, 2023, 19:21 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Good news for Team India fans, Australia's Dangerous player camaron green ruled out from 1st Test against Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X