“அதிர்ஷ்டத்தின் உச்சியில் இந்தியா”.. தென்னாப்பிரிக்காவை சுலபமாக வீழ்த்தலாம்.. ஹர்பஜன் கூறிய ஐடியா!

மும்பை: தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்துவதற்கு இந்திய அணிக்கு பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இம்மாதம் இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்திய அணியின் வீரர்கள் தேர்வில் தான் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மெர்சலான வீரர்களை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா- இந்திய தொடருக்கான அணி அறிவிப்புமெர்சலான வீரர்களை தேர்வு செய்தது தென்னாப்பிரிக்கா- இந்திய தொடருக்கான அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்க டூர்

தென்னாப்பிரிக்க டூர்

இந்திய அணி சமீப காலமாக தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகின் முன்னணி அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வீழ்த்தி வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து அணியை திணறடித்தது. இதே நம்பிக்கையுடன் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இதில் வெற்றி பெற்று விட்டால் கோலியின் கேப்டன்சி வரலாற்றில் பொறிக்கப்படும்.

காத்திருக்கும் இந்திய அணி

காத்திருக்கும் இந்திய அணி

ஏனென்றால் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியை இதுவரை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியதே இல்லை. இதுவரை தென்னாப்பிரிக்காவில் விளையாடியுள்ள 20 டெஸ்ட் போட்டிகளில் 3ல் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனினும் தொடரினை கைப்பற்றவில்லை. இதனால் இந்த முறை அதனை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஹர்பஜன் கருத்து

ஹர்பஜன் கருத்து

இந்நிலையில் இந்த முறை நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக உள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த காலக்கட்டம் இந்தியாவுக்கு நல்ல அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணி தனது வழக்கமான பலத்துடன் இல்லை. பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது.

BCCI announces India squad for South Africa Test series | Oneindia Tamil
என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த சுற்றுப்பயணத்தை எடுத்துக்கொண்டால் டிவில்லியர்ஸ், டூப்ளசிஸ் என வீரர்கள் அச்சுறுத்தல் கொடுத்தனர். அப்போதெல்லாம் இந்தியா சிறப்பாக விளையாடி இருந்தாலும் தொடரை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் தற்போது அந்த அணியின் ஃபார்ம் மோசமாக உள்ளது. இதனை பயன்படுத்தி இந்தியா சுலபமாக தொடரை கைப்பற்றி விடலாம் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Spinner Harbhajan Singh Believes India has a 'golden opportunity' to win Test series in South Africa
Story first published: Wednesday, December 8, 2021, 19:40 [IST]
Other articles published on Dec 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X