For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்காக கை கோர்க்கும் சகோதர வீரர்கள்.. பலே பாண்டியா பிரதர்ஸ்!!

டெல்லி: இதுவரை இந்திய அணி எத்தனையோ வீரர்களை கண்டுள்ளது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை சகோதரர்களாகிய இரண்டு வீரர்கள் பங்கு பெற்றது இருவர் மட்டுமே. தற்போது அந்த வரிசையில் மூன்றாவதாக இணையவுள்ளனர் ஹர்டிக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா (பாண்டியா பிரதர்ஸ்) ஆவர்.

இவர்களில் இளையவரான ஹர்டிக் பாண்டியா இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடி வருகிறார். மூத்தவரான குருனால் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. தற்போது வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இந்த தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கும் பட்சத்தில், இந்திய அணிக்காக விளையாடிய மூன்றாவது சகோதர வீரர்கள் என்ற பெருமையை பெறுவர். இதற்கு முன்னாள் இவர்கள் இருவரும் ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர்.

இந்திய அணிக்காக விளையாடிய மற்ற சகோதர வீரர்கள் :

சுரீந்தர் - மொஹிந்தர்

சுரீந்தர் - மொஹிந்தர்

இந்திய அணிக்காக விளையாடிய முதல் சகோதர வீரர்கள் சுரீந்தர் அமர்நாத் மற்றும் மொஹிந்தர் அமர்நாத் ஆவார்கள். இவர்கள் முன்னாள் வீரர் லாலா அமர்நாத்தின் புதல்வர்கள். சுரீந்தர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் ஆவா ர்.இவர் இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

மொஹிந்தரின் சிறப்பு

மொஹிந்தரின் சிறப்பு

இவரது சகோதரர் மொஹிந்தர் அமர்நாத் 69 டெஸ்ட் போட்டிகளிலும் 85 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 11 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களும் அடித்துள்ளார். மேலும் இந்தியா முதல் முறையாக உலகக்கோப்பையை (1983) வென்ற அணியில் இடம்பிடித்தவர். சுனில் கவாஸ்கர் தனது புத்தகத்தில் இவரை "சிறந்த பேட்ஸ்மேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இர்பான் - யூசுப் பதான்

இர்பான் - யூசுப் பதான்

இந்திய அணிக்காக பங்குபெற்ற இரண்டாவது சகோதர வீரர்கள் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆவார்கள். இவர்கள் இருவருமே சிறந்த ஆல்ரவுண்டர்கள் என்பது சிறப்பு. மூத்தவரான யூசுப் பதன் 2007ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார்.

 சிறப்பான ஆல் ரவுண்டர்

சிறப்பான ஆல் ரவுண்டர்

இவர் ஒரு அதிரடி ஆட்டக்காரர். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் 100+ ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளவர். இவர் 33 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். இளையவரான இர்பான் பதான் 2003ஆம் ஆண்டே அணியில் இடம்பிடித்தார்.

பாக்.கைக் கலக்கிய இர்பான்

பாக்.கைக் கலக்கிய இர்பான்

இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளிலும் 120 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார் இர்பான். டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி சதம் அடித்த வீரர்களில் இவரும் ஒருவர். இவர் 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக ஹாட்ட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 4, 2018, 13:24 [IST]
Other articles published on Jul 4, 2018
English summary
Pandiya brothers are all set to play jointly for India team and will be the third brother Duo in Indian cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X