For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங் வேண்டுமா? பவுலிங் வேண்டுமா?.. நியூசி, உடனான டி20 தொடர்.. தர்ம சங்கடத்தில் ஹர்திக் பாண்ட்யா

ராஞ்சி: நியூசிலாந்து அணியுடனான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல், பவுலிங் துறையை தேர்வு செய்வதில் மட்டும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சிக்கல் உண்டாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி ஜார்க்காண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரையும் கைப்பற்றும் நோக்கத்துடன் களமிறங்குகிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி டி20 தொடரையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முணைப்புடன் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த போட்டிக்கான இந்தியாவின் ப்ளேயிங் 11ஐ பொறுத்தவரையில் பேட்டிங்கில் எந்தவித குழப்பமும் இல்லை. ஏனென்றால் ஓப்பனிங்கில் சுப்மன் கில் - இஷான் கிஷான் தான் இறங்குவார்கள் என முன்கூட்டியே பாண்ட்யா கூறிவிட்டார். முதல் விக்கெட்டிற்கு ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா என தரமான பேட்டிங் வரிசையுடன் இருக்கிறது.

 பவுலிங்கில் குழப்பம்

பவுலிங்கில் குழப்பம்

ஆனால் பந்துவீச்சில் தான் குழப்பமே உண்டாகியுள்ளது. சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் என இருவருமே அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ப்ளேயிங் 11ல் ஒன்றாக ஆடுவது சிரமம் ஆகியுள்ளது. ஏனென்றால் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் கடும் போட்டியிட்டு வருகின்றனர். பேட்டிங்கில் ஆழம் வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் இருவரையும் சேர்த்தால் குல்தீப் அல்லது சாஹல் இருவரில் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

ராஞ்சி மைதானத்தின் பிட்ச்சானது பேட்டிங்கிற்கு சாதகமான களமாகும். பவுலிங் என எடுத்துக்கொண்டால் வேகப்பந்துவீச்சாளர்களால் தாக்கம் ஏற்படுத்த முடியாது. சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில் பார்த்தால் 3 ஸ்பின்னர்களுடன் ஆட வேண்டியது அவசியம்.

 இந்தியாவின் ப்ளான்

இந்தியாவின் ப்ளான்

பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாஷிங்டன் சுந்தரை சேர்ப்பார்களா? அல்லது பவுலிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து சாஹல் - குல்தீப்பை சேர்ப்பார்களா என குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போதை திட்டங்களின் படி ஒருநாள் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவும், டி20 போட்டிகளில் சாஹலுக்கும் வாய்ப்பளித்து வருகின்றனர்.

Story first published: Friday, January 27, 2023, 18:52 [IST]
Other articles published on Jan 27, 2023
English summary
Captain Hardik pandya in confusion over selecting Chahal vs kuldeep yadav in India playing 11 for new zealand T20, here is the details
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X