ஹர்திக் பாண்டியா இயற்கையான லீடர்.. வீரர்களை சிறப்பாக கையாள்வார்.. ஆதரவாக வந்த டேவிட் மில்லர்!

டெல்லி: இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன்சியில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோர் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பதிலாக டி20 கேப்டனாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு, 2024ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு அணியை கட்டமைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் ஸ்பிலிட் கேப்டன்சி பற்றி முன்னாள் வீரர்கள் பேச தொடங்கியுள்ளனர்.

சவுதி அரேபியா கொடுத்த அதிர்ச்சி.. ஓய்வறையில் நிலவிய அமைதி.. கேப்டனாக மெஸ்ஸி பேசிய வார்த்தைகள்! சவுதி அரேபியா கொடுத்த அதிர்ச்சி.. ஓய்வறையில் நிலவிய அமைதி.. கேப்டனாக மெஸ்ஸி பேசிய வார்த்தைகள்!

பாண்டியாவின் பொறுப்பு

பாண்டியாவின் பொறுப்பு

அதுமட்டுமல்லாமல் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பல்வேறு தொடர்களில் நிரூபித்துள்ளதோடு, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரையும் கைப்பற்றி உள்ளார். அதேபோல் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமும் கூடுதல் பொறுப்புடன் இருப்பதால், விரைவில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

டேவிட் மில்லர் கருத்து

டேவிட் மில்லர் கருத்து

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா வீரரும், குஜராத் லயன்ஸ் அணியின் முக்கிய வீரருமான டேவிட் மில்லர் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் மில்லர் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவுக்கு தலைமைப் பொறுப்பு இயற்கையாகவே உள்ளது. அவரது அணியில் உள்ள வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ, அவ்வாறே ஹர்திக் விளையாட அனுமதிப்பார்.

ஹர்திக் முன்னேற்றம்

ஹர்திக் முன்னேற்றம்

குஜராத் அணியில் அவர் தலைமையில் விளையாட போது, ஹர்திக் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர். அவரது செயல்பாடுகளில் மிகவும் கவனமாக இருப்பார். ஐபிஎல் தொடரில் நல்ல பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். அந்த பயணம், இந்திய அணிக்காகவும் தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

தோனி - கபில் தேவ்

தோனி - கபில் தேவ்

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியை பொறுத்தவரை எங்கிருந்தோ சுயம்பாக வந்தவர்கள் மட்டுமே ரசிகர்கள் எதிர்பார்த்த கோப்பைகளை வென்று கொடுத்துள்ளனர். எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த கபில் தேவ் செய்ததையும், ராஞ்சியில் பிறந்த கிரிக்கெட் ஆட வந்த தோனி வென்ற கோப்பைகளையும் வெல்வதற்கு பிசிசிஐ-யால் விதந்தோதபட்டவர்களால் முடியவில்லை. இதனால் குஜராத் மாநிலத்தில் எங்கோ பிறந்து டி20 கிரிக்கெட்டை வேகமாக புரிந்து கொண்டிருக்கும் ஹர்திக் இந்திய அணிக்காக கோப்பையை வெல்வார் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
South African player David Miller praised the captaincy of Hardik Pandya, who is acting as the T20 captain of the Indian team.
Story first published: Thursday, November 24, 2022, 19:12 [IST]
Other articles published on Nov 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X