For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை.. இது வேலைக்காகாது.. ஹோல்டிங் அதிரடி

By Aravinthan R

Recommended Video

பாண்ட்யா ரன்னும் குவிக்கலை, பந்துவீச்சும் சரியில்லை. ஹோல்டிங் அதிரடி.

லண்டன் : ஹர்திக் பண்டியா அதிக ரன் குவிப்பதும் இல்லை, பந்து வீச்சும் பயனற்றதாக உள்ளது, மொத்தத்தில் இந்தியா எதிர்பார்த்த ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அவர் இல்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் கருத்து கூறியுள்ளார்.

மைக்கேல் ஹோல்டிங் இது பற்றி கூறுகையில், “இந்திய அணி சரியான சமநிலையில் இல்லை. ஹர்திக் பண்டியாவை அவர்கள் ஒரு ஆல்-ரவுண்டராக, பந்து வீச்சில் உதவுவார் என பயன்படுத்துகிறார்கள். ஆனால், பந்துவீச்சில் அவர் அவ்வளவாக பயனளிக்கவில்லை”

Hardik Pandya is not good with ball and bat, says Holding


“அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்றால் அவர் இறங்கும் இடத்தில் தொடர்ச்சியான சதங்கள் கூட வேண்டாம், 60, 70 ரன்கள் எடுத்தால் கூட போதும். மேலும், பந்துவீச்சில் இரண்டு அல்லது மூன்று விக்கெட்கள் எடுத்தால் கூட மிகவும் மகிழ்ச்சி. ஆனால், அவர் ரன்களும் எடுக்கவில்லை, ஒன்றிரண்டு விக்கெட்களும் எடுக்கவில்லை. அது வேலைக்கு ஆகாது” என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும், பண்டியா பந்துவீச்சில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், ஒரு முழுமையான பந்துவீச்சாளராகவும் இல்லாமல், நல்ல பேட்ஸ்மேனாகவும் இல்லாத நிலையில் இருக்கிறார் என கூறி இருக்கிறார்.

பண்டியா அறிமுகமானது முதல் இந்தியாவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தவிர்த்து மற்ற டெஸ்ட் தொடர்களில் பங்கு பெற்று இருக்கிறார். எனினும், அவர் பங்கேற்ற கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






Story first published: Saturday, August 18, 2018, 9:56 [IST]
Other articles published on Aug 18, 2018
English summary
Hardik Pandya is not good with ball and bat, says Holding
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X