For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிலைமை எங்கள் கைகளை மீறி சென்றுவிட்டது - ஹர்திக் பாண்டியா வருத்தம்

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து கேவலமான கருத்தை வெளியிட்டதாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுலுக்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

மேலும் அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் விளையாட அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்வு குறித்து நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோஹரும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அதுகுறித்து வாய்திறந்துள்ள ஹர்திக் பாண்டியா, அந்த விவகாரத்தில் நிலைமை தங்களது கைகளை மீறி சென்றுவிட்டதாகவும் கிரிக்கெட்டர்களாகிய தங்களுக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பங்கேற்ற பாண்டியா, ராகுல்

பங்கேற்ற பாண்டியா, ராகுல்

கடந்த ஆண்டில் கரண் ஜோஹர் நடத்திய 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் கூட்டாக பங்கேற்றனர்.

சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு

சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு

இதில் பேசிய இருவரும் பெண்கள் குறித்து கேவலமான கருத்தை வெளியிட்ட நிலையில், அவர்களின் கருத்து பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

பேச்சுக்கு மன்னிப்பு கோரிய வீரர்கள்

பேச்சுக்கு மன்னிப்பு கோரிய வீரர்கள்

இதையடுத்து இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டனர். தங்களது பேச்சுக்கு இருவரும் மன்னிப்பு கோரியதையடுத்து இருவரும் மீண்டும் அணியில் இணைந்து விளையாடினர்.

நிகழ்விற்கு பொறுப்பேற்பு

நிகழ்விற்கு பொறுப்பேற்பு

இதனிடையே, தன்னுடைய நிகழ்ச்சியில் தன்னுடைய விருந்தினர்களாக பங்கேற்ற ஹர்திக் மற்றும் ராகுலுக்கு ஏற்பட்ட இந்த தடைக்கு நிகழ்ச்சியை நடத்திய கரண் ஜோஹர் வருத்தம் தெரிவித்தார்.

உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பங்களுக்கு நன்கொடை

உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பங்களுக்கு நன்கொடை

மேலும் இருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட பிசிசிஐ, அதில் 10 லட்சம் ரூபாயை உயிரிழந்த துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பங்களுக்கும் மீதமுள்ள 10 லட்சம் ரூபாயை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காகவும் வழங்க அறிவுறுத்தியது.

ஹர்திக் பாண்டியா வருத்தம்

ஹர்திக் பாண்டியா வருத்தம்

இந்நிலையில் சில மாதங்கள் கழித்து தற்போது அந்த சம்பவம் குறித்து வாய்திறந்த ஹர்திக் பாண்டியா, அந்த விவகாரத்தில் நிலைமை தங்களது கைமீறி போனதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

"பந்து எங்கள் கைகளில் இல்லை"

கிரிக்கெட் வீரர்களாகிய தங்களுக்கு அந்த விமர்சனம் எந்தமாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியவில்லை என்று கூறிய ஹர்திக் பாண்டியா, அந்த நேரத்தில் பந்து தங்களது கைகளில் இல்லை என வருத்தம் தெரிவித்தார்.

Story first published: Thursday, January 9, 2020, 14:40 [IST]
Other articles published on Jan 9, 2020
English summary
Hardik Pandya on Koffee with Karan Controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X