For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கும்ளேவின் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்த டிராவிட்.. இனி அணித்தேர்வில் புதிய முறை.. காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை மனதில் வைத்து தேர்வு செய்யும் முறைக்கு புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்வது குறித்த விவகாரம் சூடுபிடித்து வருகிறது.

ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடிவிட்டால், உடனடியாக அவரை இந்திய அணியில் எடுத்துவிடுவதா என குற்றச்சாட்டுக்கள் குவிந்தன.

மீண்டும் அடித்து நொறுக்கிய தமிழக வீரர் ஷாரூக்கான்…!! மீண்டும் அடித்து நொறுக்கிய தமிழக வீரர் ஷாரூக்கான்…!!

டிராவிட்டின் புதிய ரூல்ஸ்

டிராவிட்டின் புதிய ரூல்ஸ்

இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். அதாவது வீரர்கள் காயத்தினாலோ, ஃபார்ம் அவுட்டாகி இந்திய அணியை விட்டு வெளியேறினால், அதன்பிறகு அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இந்திய அணியின் தேர்வில் பங்கேற்க முடியும்.

மீண்டும் கையிலெடுத்த டிராவிட்

மீண்டும் கையிலெடுத்த டிராவிட்

இந்த திட்டத்தை முதலில் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போது அறிமுகப்படுத்தினார். அவருக்கு பின்னர் ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளரான போது அத்திட்டம் கைவிடப்பட்டது. பெரும்பாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகினர். இதன் விளைவாக தான் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சொதப்பியது என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தெரிவித்தனர்.

என்ன விளைவுகள்

என்ன விளைவுகள்

இந்நிலையில் ராகுல் டிராவிட் அதனை மீண்டும் கொண்டு வந்துள்ளதால், இனி ஐபிஎல் தொடரில் விளையாடுவதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். விஜய் ஹசாரே அல்லது ராஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் விளையாடுவதே முதன்மையாக எடுத்துக்கொள்ளப்படும். காயத்தினால் வெளியேறும் அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியை உள்ளூர் போட்டிகளில் நிரூபிப்பதால் சர்வதேச போட்டிக்கு தயாராக இருப்பார்கள்.

Recommended Video

BCCI vs Dravid இடையே கருத்து வேறுபாடு? அணித்தேர்வில் குழப்பம்| Oneindia Tamil
விதிமுறையின் நோக்கம்

விதிமுறையின் நோக்கம்

இந்த விதிமுறையின் மூலம் வீரர்களின் மனநிலையை இன்னும் பலப்படுத்த முடியும். காயத்தால் வெளியேறும் அவர்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் ஒரு நம்பிக்கை கிடைக்கும், புத்துணர்ச்சி கிடைக்கும். அதே நம்பிக்கையுடன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வரும்போது, இன்னும் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Story first published: Wednesday, December 8, 2021, 18:28 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
Head coach Rahul Dravid brings back the Anil Kumble era policy for the team selection
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X