For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ICC T20 World Cup 2021 India Schedule: சவால்.. 'குரூப் 2'ல் இந்தியா மோதும் ஆட்டங்கள் - முழு விவரம்

மும்பை: ஐக்கிய அரபிய அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா மோதும் ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Recommended Video

ICC T20 World Cup 2021 Schedule Announced | OneIndia Tamil

இந்த வருடம் இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர், கொரோனா காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில், இந்தியா விளையாடும் ஆட்டங்கள் குறித்த முழு விவரம் இங்கே பார்க்கலாம்

ICC Men's T20 World Cup 2021 fixtures: ஆரம்பமே தூள்.. அக்.24 பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணிICC Men's T20 World Cup 2021 fixtures: ஆரம்பமே தூள்.. அக்.24 பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி

 அக்டோபர் 17 முதல்

அக்டோபர் 17 முதல்

டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகளை நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.

 மொத்தம் 30 போட்டிகள்

மொத்தம் 30 போட்டிகள்

இதில், குரூப் 'ஏ'வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா அணிகளும், குரூப் 'பி'-யில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பாப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் மோதுகின்றன. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டது. முதல் சுற்றில் வெற்றிபெற்ற 4 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்கும். அக்டோபர் 24ஆம் தேதி துவங்கும் இரண்டாவது சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளது. 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் விளையாடுகின்றன. அதன்பிறகு மூன்று பிளே ஆஃப் சுற்று, இரண்டு அரையிறுதி, ஒரு பைனல் நடைபெறும். இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

 காத்திருக்கும் சவால்

காத்திருக்கும் சவால்

குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில், இந்தியா பங்கேற்கும் குரூப் 2 பிரிவின் அனைத்து போட்டிகள் மற்றும் இந்தியா மோதும் ஆட்டங்கள் லிஸ்ட் இங்கே,

 சூப்பர் 12 - குரூப் 2 போட்டிகள் விவரம்

சூப்பர் 12 - குரூப் 2 போட்டிகள் விவரம்

  • இந்தியா vs பாகிஸ்தான் - 24 அக்டோபர் , 18:00, துபாய்
  • ஆப்கானிஸ்தான் vs B1 - 25 அக்டோபர் , 18:00, ஷார்ஜா
  • நியூசிலாந்து vs பாகிஸ்தான் - 26 அக்டோபர் , 18:00, ஷார்ஜா
  • A2 vs B1 - 27 அக்டோபர் , 18:00, அபுதாபி
  • ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - 29 அக்டாபர், 18:00, துபாய்
  • ஆப்கானிஸ்தான் vs A2 - 31 அக்டோபர் , 14:00, அபுதாபி
  • இந்தியா vs நியூசிலாந்து- 31 அக்டோபர் , 18:00, துபாய்
  • A2 vs பாகிஸ்தான் - 2 நவம்பர், 18:00, அபுதாபி
  • B1 vs நியூசிலாந்து - 3 நவம்பர், 14:00, துபாய்
  • இந்தியா vs ஆப்கானிஸ்தான் - 3 நவம்பர், 18:00, அபுதாபி
  • நியூசிலாந்து vs A2 - 5 நவம்பர், 14:00, ஷார்ஜா
  • இந்தியா vs B1 - 5 நவம்பர், 18:00, துபாய்
  • நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - 7 நவம்பர், 14:00, அபுதாபி
  • B1 vs பாகிஸ்தான் - 7 நவம்பர், 18:00, ஷார்ஜா
  • இந்தியா vs A2 - 8 நவம்பர், 18:00, துபாய்
 அச்சுறுத்தும் நியூசிலாந்து

அச்சுறுத்தும் நியூசிலாந்து

இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை விட, நியூசிலாந்து அணியே விராட் கோலி படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணியும் லேசுப்பட்டதால். உலகத் தரம் வாய்ந்த ரஷீத் கான் அந்த அணியில் இருக்கிறார். அதுபோல், முகமது நபி உள்ளிட்ட சில சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கின்றனர். ஸோ, ஆப்கானிஸ்தான் அணியை சாதாரணமாக இந்தியா எடுத்துக் கொள்ளாது என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, August 17, 2021, 21:36 [IST]
Other articles published on Aug 17, 2021
English summary
full list of india matches t20 world cup - டி20 உலகக் கோப்பை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X