பேட்ஸ்மேன் அவதாரம் எடுத்த கே.கே.ஆரின் சுனில் நரேன்.. கப் நமது இல்லையா மிஸ்டர் கோஹ்லி?

Posted By:

பஞ்சாப்: ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த முறை கப்பு நமது என்று இணையம் முழுக்க விளம்பரம் செய்து வந்த பெங்களூர் ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சுனில் நரேன் என்ற பவுலரை முதலில் களமிறக்கி, கொல்கத்தா அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்று இருக்கிறது.

சுனில் நரேன் நேற்றைய போட்டியில் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதேபோல் கொல்கத்தா கேப்டனாக தினேஷ் கார்த்திக் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்கமே பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டி காக் வெறும் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதற்கு பின் மெக்குலம், கோஹ்லி ஜோடி சேர்ந்து அதிரடியை தொடங்கியது.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இந்த நிலையில் அதிரடியாக ஆடிய மெக்குலம் 27 பந்தில் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் டி வில்லியர்ஸ் களமிறங்கி பந்துகளை பறக்கவிட்டார். இவர் அதிரடியாக 23 பந்தில் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் கோஹ்லி 31 ரன்களில் அவுட்டானார். கடைசியாக வந்த மன்தீப் சிங் தன் பங்கிற்கு 37 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூர் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

சுனில் நரேன்

சுனில் நரேன்

அதன்பின்தான் போட்டியில் சுவாரசியம் கூடியது. கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதல் பேட்ஸ்மேனாக, சுனில் நரேனை இறக்கினார். இது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுனில் நரேன் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆட தொடங்கினார். வெறும் 16 பந்துகளில் இவர் 50 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இதுதான் ஐபிஎல் போட்டியில் இரண்டாவதாக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதம் ஆகும்.

மீண்டது

மீண்டது

ஆனால் அதே அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா, லைன் எல்லோரும் லைனாக அவுட்டானார்கள். அவர்கள் அவுட்டான பின் தினேஷ் கார்த்திக், ராணா ஜோடி ஒன்று சேர்ந்தது. ராணா 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் தினேஷ் கார்த்திக் அவுட்டாகாமல் அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். அவர் 29 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதனால் 18.5 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து கொல்கத்தா முதல் வெற்றியை பதிவு செய்தது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Kolkata wins the match against Bengaluru in IPL 2018.
Story first published: Monday, April 9, 2018, 9:31 [IST]
Other articles published on Apr 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற