For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிர்ச்சி வரலாறு... இங்கிலாந்தில் எத்தனை டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்றுள்ளது தெரியுமா?

By Aravinthan R

Recommended Video

இங்கிலாந்தில் எத்தனை டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்றுள்ளது தெரியுமா?- வீடியோ

சென்னை : பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஒரு வழியாக இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி வெல்லுமா? அல்லது சொந்த மண்ணில் ஆளுமை செலுத்தும் இங்கிலாந்து அணி வெல்லுமா? என்ற கேள்விகள் இந்த தொடரை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது.

இந்த நேரத்தில் வரலாறை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமே என இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி எத்தனை முறை டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது என பார்த்தால், அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.

இதற்கு முன் பத்தொன்பது முறை இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது.

வெறும் 3 தொடர் தான் வெற்றி

வெறும் 3 தொடர் தான் வெற்றி

சுதந்திரம் பெற்ற காலத்திற்கும் முன்பு 1911 தொடங்கி, 2014 வரை சீரான இடைவெளியில் இந்த தொடர்கள் நடந்துள்ளன. இதில் இந்தியா வெறும் மூன்று முறை மட்டுமே வென்று இருக்கிறது என்பது நம்பமுடியாத செய்தியாக உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் தடுமாறி வருவது இதிலிருந்தே தெளிவாக புரிகிறது.

எல்லாத்துக்கும் கிளைமேட்தான் காரணம்

எல்லாத்துக்கும் கிளைமேட்தான் காரணம்

அதற்கு இங்கிலாந்தின் குளிர் மற்றும் சூழ்நிலைகளும் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் தோல்விகளை விட்டுவிட்டு, எந்தெந்த ஆண்டு இந்திய அணி வெற்றி அல்லது சமன் செய்தது என்பதை பார்ப்போம்.

1971 - வடேகர் தலைமையில் வெற்றி 1-0

1971 - வடேகர் தலைமையில் வெற்றி 1-0

1971 டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களையும் டிரா செய்த இந்திய அணி, மூன்றாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்றது. ஓவல் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர் சந்திரசேகர் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

1986 - கபில் தேவ் தலைமையில் வெற்றி 2-0

1986 - கபில் தேவ் தலைமையில் வெற்றி 2-0

கபில் தேவின் சிறப்பான பந்து வீச்சில் முதல் டெஸ்டை கைப்பற்றியது இந்திய அணி. இரண்டாவது டெஸ்ட்டில், முதல் டெஸ்டின் வெற்றி கொடுத்த நம்பிக்கையோடு இந்திய அணி அபாரமாக ஆடி 279 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தை டிரா செய்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2002 - சவுரவ் கங்குலி தலைமையில் சமன் 1-1

2002 - சவுரவ் கங்குலி தலைமையில் சமன் 1-1

நாட்வெஸ்ட் ஒருநாள் தொடரை வென்று களிப்பில் இருந்த இந்திய அணி, லார்ட்ஸ் அரங்கில் நடந்த முதல் போட்டியில் தோற்றாலும், லீட்ஸ்-இல் நடந்த இரண்டாவது போட்டியில் கங்குலி மற்றும் டிராவிட் சதம் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். அடுத்த இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தது.

2007 - ராகுல் டிராவிட் தலைமையில் வெற்றி 1-0

2007 - ராகுல் டிராவிட் தலைமையில் வெற்றி 1-0

உலகக்கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் வெளியேறிய இந்திய அணி, அடுத்து இங்கிலாந்து தொடரில் ஆடியது. வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியத்தில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணி, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளை டிரா செய்து தொடரை வென்றது.

கோஹ்லி என்ன பண்ணப் போறார்

கோஹ்லி என்ன பண்ணப் போறார்

தற்போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இதில் இந்தியா வெற்றி பெறுமா, டிரா செய்யுமா அல்லது தோல்வி அடையுமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Tuesday, July 31, 2018, 22:25 [IST]
Other articles published on Jul 31, 2018
English summary
Indian cricket team is struggling in England soil over a long period of time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X