For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆள விடுங்கப்பா, நான் தேர்தலில் போட்டியிடவில்லை - ஷேவாக்

டெல்லி: நான் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. குறிப்பாக தெற்கு டெல்லியில் நான் போட்டியிடப் போவதாக கூறப்படுவதில் சற்றும் உண்மை இல்லை என்று கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதேசமயம், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் புதிய கேப்டனாக பணியாற்றவுள்ள கெவின் பீட்டர்சன், விடுத்துள்ள பதில் டிவிட்டரில், ஷேவாக் நீங்கள் போட்டியிடுங்கள், நான் ஓட்டுப் போடுகிறேன் என்று அவரைக் கிண்டலடித்துள்ளார்.

ஏம்ப்பா ஏன் இப்படி

ஏம்ப்பா ஏன் இப்படி

நான் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஏன் மீடியாக்கள் செய்தி பரப்புகின்றன என்று தெரியவில்லை.

நான் போட்டியிடவில்லை

நான் போட்டியிடவில்லை

நான் தேர்தலில் போட்டியிடவில்லை. தெற்கு டெல்லியிலும் நிற்கவில்லை என்று கூறியுள்ளார் ஷேவாக்.

நீங்க நில்லுங்க பாஸ்.. நான் ஓட்டுப் போடறேன்

நீங்க நில்லுங்க பாஸ்.. நான் ஓட்டுப் போடறேன்

இந்த டிவிட்டருக்குப் பதில் கொடுத்துள்ள கெவின் பீட்டர்சன், நீங்க நில்லுங்கள், நான் ஓட்டுப் போடுகிறேன் என்று கிண்டலடித்துள்ளார்.

டெல்லி அணியின் ஷேவாக்

டெல்லி அணியின் ஷேவாக்

ஷேவாக் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இந்த முறை கேப்டன் பொறுப்பை கெவின் பீட்டர்சனிடம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் சார்பில்

காங்கிரஸ் சார்பில்

முன்னதாக வெளியான ஒரு பத்திரிக்கைச் செய்தியில், காங்கிரஸ் சார்பில் ஷேவாக் தெற்கு டெல்லியில் போட்டியிடலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்குத்தான் ஷேவாக் இப்படி மறுத்துள்ளார்.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

தற்போது இந்திய அணியில் இடமில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் ஷேவாக். சமீப காலமாக அவரும் சரியாக ஆடாமல் சொதப்பியபடி இருக்கிறார் என்பதும் நினைவிருக்கலாம்.

Story first published: Thursday, March 20, 2014, 13:15 [IST]
Other articles published on Mar 20, 2014
English summary
Opening batsman Virender Sehwag today dismissed reports of him contesting Lok Sabha polls from South Delhi. Sehwag took to the micro-blogging site Twitter to clarify that he is not contesting election. "I m not contesting election, I don't know why media is running this story...," Sehwag (virendersehwag) tweeted on Thursday afternoon. To Sehwag's tweet, former England captain Kevin Pietersen said he should contest and he would vote for him. "You should! I would vote for you..," Pietersen tweeted.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X