நெனைச்சாலே அதிர்ச்சியா இருக்கு... தாக்கூருக்கும், புவிக்கும் தானே கொடுத்திருக்கனும்... விராட் கோலி!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ளது.

இந்த தொடரில் 2 போட்டிகளை வெற்றி கொண்டுள்ள இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வெற்றி கொண்டுள்ளது.

இதனிடையே, தொடரில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருதும் ஜானி பேர்ஸ்டோவிற்கு தொடர் நாயகன் விருதும் அளிக்கப்பட்டுள்ளது குறித்து விராட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா தொடர் வெற்றி

இந்தியா தொடர் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் கடந்த 23ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற 3வது மற்றும் இறுதிப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

தொடர் நாயகன் பேர்ஸ்டோ

தொடர் நாயகன் பேர்ஸ்டோ

வெற்றியை தீர்மானித்த இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரையும் இந்தியா கைப்பற்றியது. ஆயினும் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தொடர் நாயகன் விருது ஜானி பேர்ஸ்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விராட் அதிர்ச்சி

விராட் அதிர்ச்சி

இதனிடையே போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, போட்டியில் 4 விக்கெட்டுகள் மற்றும் 30 ரன்களை எடுத்த ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படாதது அதிர்ச்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆட்டத்தை அவர் சிறப்பாக முடித்துக் கொடுத்ததாகவும் விராட் கூறியுள்ளார்.

விராட் கேள்வி

விராட் கேள்வி

இதேபோல தொடர் முழுமையிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள புவனேஸ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படாததும் அதிர்ச்சி அளித்ததாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பவர்-ப்ளே மற்றும் மிடில் ஆர்டரில் போட்டிகளை சிறப்பாக கொண்டு சென்றதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
These guys were the difference in middle overs and powerplay
Story first published: Monday, March 29, 2021, 11:57 [IST]
Other articles published on Mar 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X