அன்றே சொன்ன விராட் கோலி.. இன்று செய்து காட்டிய பென் ஸ்டோக்ஸ்.. ராவல்பிண்டியில் நடந்த சுவாரஸ்சியம்!

சென்னை: 2014ம் ஆண்டு கேப்டனான போது விராட் கோலி பேசிய வார்த்தைகளை, இன்று பாகிஸ்தானை வீழ்த்திய பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

2014ஆம் ஆண்டில் இந்திய கேப்டனாக இருந்த தோனி டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த பின், இந்திய அணியின் அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் உடனடியாக தெரிந்தது.

445 ரன்களை இலக்கையும் எட்டிவிடலாம் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் வெற்றிபெற முயன்று ஆஸ்திரேலியா மண்ணில் தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்விக்கு பின் இந்திய கேப்டனாக இருந்த விராட் கோலி பேசிய வார்த்தைகள் தான் இந்திய அணியின் தலையெழுத்தை நிர்ணயித்தது.

 சூப்பர் ஹீரோ போல் கேட்ச் பிடித்த விராட் கோலி.. ஒரே கையால் பறந்து சாகசம்.. ஷகிபுல் ஹசன் அதிர்ச்சி சூப்பர் ஹீரோ போல் கேட்ச் பிடித்த விராட் கோலி.. ஒரே கையால் பறந்து சாகசம்.. ஷகிபுல் ஹசன் அதிர்ச்சி

 டிரா பற்றி விராட் கோலி

டிரா பற்றி விராட் கோலி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்விக்கு பின் பேசிய விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரா செய்ய நாங்கள் விளையாட மாட்டோம். ஒன்று வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் தோற்க வேண்டும். அதற்கேற்றாற்போல் அதிரடியாக செயல்படுவோம் என்று தெரிவித்து இருந்தார். இதனை சொன்னதோடு மட்டுமல்லாமல், செயல்பாடுகளிலும் இந்திய அணியை மாற்ற விராட் கோலி ஈடுபட்டார்.

 இந்தியாவின் அசாத்திய வெற்றி

இந்தியாவின் அசாத்திய வெற்றி

இங்கிலாந்து மண்ணில் 180 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்து, இரண்டே செஷன்களில் வீழ்த்தி காட்டினார். ஆஸ்திரேலிய மண்ணில் கடைசி நாளில் 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, எதற்கும் அஞ்சாமல் இந்திய அணி இலக்கை நோக்கி விளையாடியது. இந்த அணியின் அணுகுமுறை மூலம் ஏராளாமான வெற்றிகளை பெற்றது.

 பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

தற்போது விராட் கோலியின் அணுகுமுறையை பென் ஸ்டோக்ஸ் கடைபிடித்து வருகிறார். பாகிஸ்தான் உடனான வெற்றிக்கு பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், எப்போதுமே எனக்கு டிரா செய்வதற்காக விளையாடுவதில் நாட்டம் இருந்ததில்லை. அதேபோல் ஓய்வறையில் உள்ள வீரர்களுக்கும் டிரா செய்வதில் விருப்பமில்லை. போட்டியென்றால் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் தோல்வியடைய வேண்டும்.

 ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

இந்த பாணியில் மட்டுமே இங்கிலாந்து அணி செயல்படும் என்று தெரிவித்துள்ளார். நியூசிலாந்து முன்னா கேப்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இங்கிலாந்து அதிரடியான அணுகுமுறையையே பின்பற்றி வருகிறது. வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் களத்தில் ஆக்ரோஷத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த பலன்களை விடவும், இங்கிலாந்து அணியும் பலன்களை அனுபவிக்க தொடங்கியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
The words spoken by Virat Kohli when he became the captain in 2014, after defeating Pakistan today, English captain Ben Stokes has become a topic of conversation on social media.
Story first published: Monday, December 5, 2022, 20:27 [IST]
Other articles published on Dec 5, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X