For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனி கூப்பிட்டா கண்ணை மூடிட்டு பவுலிங் பண்ணுவேன்.. உருகும் கேதர் ஜாதவ்

மவுண்ட் மவுங்கானுயி: தோனி அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு பந்து வீசுவேன் என்று கேதர் ஜாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மவுண்ட் மவுங்கானுயி நகரில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் கடைசி நேரத்தில் களமிறங்கிய கேதர் ஜாதவ், தோனியுடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்து 22 ரன்கள் சேர்த்தார். இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் நியூசி. பந்துவீச்சை வெளுத்ததால் அணியின் ஸ்கோர் 324 ரன்களை எட்டியது.

பகுதிநேரமே பந்துவீசும் ஜாதவ்

பகுதிநேரமே பந்துவீசும் ஜாதவ்

கேதர் ஜாதவின் அந்த ஆட்டம், பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. பகுதிநேர பந்துவீச்சாளராக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையும் கொண்டவர். நேப்பியர் போட்டியில் ஹென்ரி நிகோலஸையும், 2வது போட்டியில் ஆபத்தான பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் விக்கெட்டையும் ஜாதவ் வீழ்த்தினார். இதுவரை 51 போட்டிகளில் விளையாடியுள்ள ஜாதவ் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பேட்டியளித்த கேதர் ஜாதவ்

பேட்டியளித்த கேதர் ஜாதவ்

2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றி குறித்து அவர் கூறியதாவது: 2வது ஒருநாள் போட்டியில் தோனியுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சி. இன்று ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதற்கு தோனியே காரணம். அவருடன் நான் இணைந்து விளையாடும்போது எப்போதும் என்னை தோனி அவர் உற்சாகப் படுத்திக் கொண்டே இருப்பார்.

சந்தித்தது எப்போது?

சந்தித்தது எப்போது?

ஜிம்பாப்வே தொடரின் போது தோனி என்னை முதலில் சந்தித்தார். அதன்பின் இந்தியாவில் நியூசிலாந்து தொடரின் போது, என்னை சந்தித்து 2 ஓவர்கள் பந்து வீசுமாறு கூறினார். ஆனால், எனது அதிர்ஷ்டமோ... என்னவோ.. 2-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டேன்.

அனைவருக்குமே உற்சாகம்

அனைவருக்குமே உற்சாகம்

உடனே மூத்த வீரர்கள் கோஹ்லி, ரோஹித், அனைவரும் என்னை வாழ்த்தி உற்சாகப் படுத்தினர். எனக்கு நம்பிக்கையளிக்கு என்னை அணியில் பகுதிநேரப் பந்துவீச்சாளராக மாற்றியவர் தோனிதான். இந்த நேரத்தில் நான் தோனி, கோஹ்லி ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

பந்துவீச அழைப்பு

பந்துவீச அழைப்பு

சிக்கலான தருணங்களில் என்னால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை வைத்து பந்துவீச அழைக்கிறார்கள். அதுபோலவே விக்கெட்டும் விழுகிறது. கடந்த காலங்களிலும் நான் தோனியிடம் நீங்கள் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு பந்து வீசுவேன். விக்கெட்டையும் கொண்டுவருவேன் என்று தெரிவித்துள்ளேன்.

பகுதிநேர பந்துவீச்சாளர்

பகுதிநேர பந்துவீச்சாளர்

பிரதான சுழற்பந்துவீச்சாளராக வரும் எண்ணம் இல்லை. ரன்களை அதிகம் கொடுக்காத பகுதிநேர பந்துவீச்சாளராக வரவே விருப்பம். சிலநேரங்களில் பேட்ஸ்மேன்கள் பகுதிநேர பந்துவீச்சாளர்களை குறைத்து மதிப்பிடுவர். அப்போது அவர்களின் பலவீனம் அறிந்து பந்துவீசும் போது விக்கெட் கிடைத்து விடும் என்று கேதர் ஜாதவ் தெரிவித்தார்.

Story first published: Sunday, January 27, 2019, 11:55 [IST]
Other articles published on Jan 27, 2019
English summary
Kedar Jadhav, who has picked up the big wickets of Kane Williamson and Ross Taylor in the two ODIs against New Zealand, said he trusts Dhoni enough to follow his instructions with his eyes shut.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X