For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னோட உடல் ஒத்துழைக்கும் வரைக்கும் கிரிக்கெட்டை விளையாடுவேன்.. இஷாந்த் சர்மா உறுதி

துபாய் : இந்திய கிரிக்கெட் அணியின் பௌலர் இஷாந்த் சர்மாவுக்கு நேற்று அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், நாட்டுக்கு பேர் வாங்கிக் கொடுக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு செயலாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரையில் கிரிக்கெட்டை விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

I will continue to play till the time my body allows: Ishant Sharma after receiving Arjuna Award

டெஸ்ட் கிரிக்கெட்டில் 97 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய பௌலர் இஷாந்த் சர்மா 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 300 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் 3 விக்கெட்டுகளே பாக்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட துபாயில் உள்ள இஷாந்த் சர்மாவிற்கு நேற்று அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் முக்கிய பௌலராக அவர் உள்ளார்.

வேணாம் பிலிப்ஸு.. சொன்னாக் கேளு.. கடைசி வரை அவுட் ஆகலையே.. பேட்ரியாட்ஸ் அணியை கதற வைத்த வீரர்!வேணாம் பிலிப்ஸு.. சொன்னாக் கேளு.. கடைசி வரை அவுட் ஆகலையே.. பேட்ரியாட்ஸ் அணியை கதற வைத்த வீரர்!

இந்நிலையில் இந்த விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சியும் பெருமையும் தெரிவித்துள்ள இஷாந்த் சர்மா, நாட்டுக்கு பேர் வாங்கி கொடுக்கும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு செயலாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து கிரிக்கெட்டை விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். விருதுகளை வாங்கியுள்ள மற்ற வீரர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 30, 2020, 14:16 [IST]
Other articles published on Aug 30, 2020
English summary
Till the time my body allows, I will continue to Play cricket -Ishant Sharma
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X