For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். போட்டிகளை சூதாடிகளின் சொர்க்கமாக மாற்றியிருக்கக் கூடாது.. சாடுவது இயன் சாப்பல்

By Mathi

மும்பை: ஐ.பி.எல். போட்டிகளை சூதாட்ட தரகர்களின் சொர்க்கமாக மாற்றி இருக்கக் கூடாது என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் விமர்சித்துள்ளார்.

இது குறித்து மிட் டே ஆங்கில ஏட்டில் அவர் எழுதியுள்ளதாவது:

கிரிக்கெட்டை ஒரு விஷயம் தரம் தாழ்த்துகிறது என்றால அது ஊழல், சூதாட்டம் ஆகியவையே. அனைத்து ரசிகர்களையும், மக்களையும் எப்போதும் முட்டாள்களாக்கி விட முடியாது;

தடை- செம டோஸ்

தடை- செம டோஸ்

அவர்கள் ஒன்று போட்டிகளை பார்க்க நேரில் வரமால் அல்லது தொலைக்காட்சியில் போட்டிகளைப் பார்க்காமல் தங்கள் எதிர்ப்பை காண்பித்து விடுவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தடை செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட்டை நோயாக அரித்து வரும் ஒரு விவகாரத்துக்கான வலுவான மருந்தே.

முதுகெலும்பில்லாத பிசிசிஐ

முதுகெலும்பில்லாத பிசிசிஐ

ஆனால், சட்டபூர்வமாக நீதிபதிகள் இத்தகைய தண்டனையை அளித்திருப்பது, ஒரு பெரிய கிரிக்கெட் அமைப்பாக, செல்வாக்குள்ள கிரிக்கெட் அமைப்பாக பிசிசிஐ-யின் முதுகெலும்பின்மையையே பறைசாற்றுகிறது.

பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலையே..

பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலையே..

கிரிக்கெட் ஊழல்வாதிகளுக்கு எதிராக, போலீஸ், செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி நிருபர்கள், தற்போது நீதித்துறை ஆகியவையே பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கின்றன. பிசிசிஐ விதிமுறைகளில் சூதாட்டம் தடைசெய்யப்பட்டிருக்கும் போது அவர்களே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஒழுங்கா செயல்படலை...

ஒழுங்கா செயல்படலை...

அவ்வளவு ஏன் அணி உரிமையாளர்கள் தொடர்புடையவர்களை நீக்கும் நடவடிக்கையையோ, தண்டனையையோ மேற்கொள்ளவில்லை? இது அமைப்பின் இயலாமையைக் காட்டுகிறது. பிசிசிஐ நிர்வாகம் கிரிக்கெட் ஆட்டத்துக்கு நல்லவிதத்தில் சேவையாற்றவில்லை என்பதையே இந்த விவகாரம் எடுத்துரைக்கிறது.

இவ்வாறு இயன் சாப்பல் எழுதியுள்ளார்.

Story first published: Friday, July 17, 2015, 6:05 [IST]
Other articles published on Jul 17, 2015
English summary
Former Australia Cricket team captain Ian Chappell slammed BCCI over IPL Fixings.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X