For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் 100 நாட்களில் ஐ.சி.சி. உலகக் கோப்பை தொடர் – அறிவிப்பு வெளியானது

12வது ஐ.சி.சி. மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான 100 நாள் கவுன்டவுன் இன்று தொடங்கியது.

இந்த தொடர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு வீடியோவை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 3 இடங்களுக்கான தகுதிப் போட்டிகள் தனியாக நடைபெற்று வருகிறது.

ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் தகுதிச் சுற்றில் குரூப் ஏ பிரிவில் மேற்கிந்திய தீவகள் ,இலங்கை,நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே, தாய்லாந்து,அமெரிக்கா அணிகளும் இடம்பெற்றுள்ளன.இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்கள் பிடிக்கும் அணி சூப்பர் 6 சுற்றில் , விளையாடும். இதில் பெறும் புள்ளிகளும் முதல் சுற்றில் பெற்ற புள்ளிகளையும் சேர்த்து யார் முதல் 3 இடங்களை பிடிக்கிறார்களோ அவர்கள் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிப் பெறுவர்.

ICC 100 Days Countdown For another Worldcup

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா 6 முறையும், இங்கிலாந்து 4 முறையும் வென்றுள்ளது. நியூசிலாந்து 1 முறை வென்றுள்ளது. இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டி வரை தகுதி பெற்றுள்ளது. தற்போது ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக விளங்கி வருகிறது. தொடர்ந்து 26 ஒருநாள் போட்டியில் வென்ற அந்த அணியின் வெற்றி பயணததை இந்திய மகளிர் அணியே தடுத்து நிறுத்தியது.

இந்திய மகளிர் அணியின் ஜாம்பவனான மித்தாலி ராஜிக்கு இது கடைசி உலகக் கோப்பையாக அமையலாம். இன்னும் 100 நாட்களே உலகக் கோப்பைக்கு உள்ளதால் அனைத்து அணிகளும் தங்களது அணியை பலப்படுத்தும் இறுதிக் கட்ட முயற்சியில் உள்ளனர்.

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!

Story first published: Wednesday, November 24, 2021, 21:30 [IST]
Other articles published on Nov 24, 2021
English summary
ICC Released 100 days countdown for Womens world cup. NZ Hosts Womens World cup for the First time
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X