For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பையில் குழப்பமே வேணாம்.. எல்லா போட்டிக்கும் ஒருநாள் அந்தஸ்து. ஐசிசி அறிவிப்பு

By

பெங்களூரு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 15 முதல் 28ஆம் தேதி வரை யுனைடெட் அரபு எமிரேட்ஸில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டி தொடரில் இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்,இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்குபெறுகின்றன.

icc awards odi status to all asia cup matches whereas hongkong dont have odi status so far


இதில் ஹாங்காங் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் ஐசிசி ஒருநாள் அந்தஸ்து உள்ளது. இந்நிலையில் ஹாங்காங் அணி பங்குபெறும் ஒருநாள் போட்டிகள் சர்வதேச ஒருநாள் அந்தஸ்தை பெறுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில் ஐசிசி சேர்மன் டேவிட் ரிச்சர்ட்சன் நேற்று கூறியதாவது, ஆசியா கோப்பை போட்டிகளில் நடைபெறும் அனைத்து போட்டிகளுக்கும் தற்காலிக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை வளர்க்கும் பொருட்டு தொடர்ந்து அந்த நாடுகளின் கிரிக்கெட் வளர்ச்சியை பொறுத்து நிரந்தர அந்தஸ்து வழங்கப்படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகளின் போது பல போட்டிகள் ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படாமல் இருந்தது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதனை தொடர்ந்து ஐசிசி நிர்வாக குழு ஆசிய கோப்பை போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கியதாகவும் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது 20ஓவர் போட்டிகள் விளையாட தகுதி பெற்றுள்ள நாடுகள் விளையாடும் அனைத்து டி20 போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதே போல ஒருநாள் போட்டிகளுக்கும் வழங்கப்படுவது குறித்து இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

ஹாங்காங் அணி ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.





Story first published: Monday, September 10, 2018, 11:31 [IST]
Other articles published on Sep 10, 2018
English summary
ICC awards odi status to all Asia cup matches whereas hongkong don't have odi status so far
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X