For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் நாயகன் விருது கோலிக்கு கிடையாது.. ஐசிசி வைத்த டிவிஸ்ட்.. அப்போ ரசிகர்களின் ஓட்டு?

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை தொடர் நாயகனுக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்படாதது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடப்பு டி20 உலக கோப்பையில் விராட் கோலி 4 அரை சதம் அடித்திருக்கிறார். 98.6 என்ற அளவுக்கு சராசரி பேட்டிங்கில் வைத்திருக்கிறார்.

கோலியின் ஸ்ட்ரைக்ரேட் 136 ஆக உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி 25 பவுண்டர்களையும் 8 சிக்ஸர்களையும் அடித்திருக்கிறார்.

சாம் கரண்

சாம் கரண்

இந்த நிலையில் தொடர் நாயகன் விருதை ரசிகர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறி ஐசிசி தனது இணையதளத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி விராட் கோலி தான் அதிக வாக்குகளை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மற்றும் ஐசிசி Hall of fame விருது வென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர் சந்திரபால் ஆகியோர் இங்கிலாந்து வீரர் ஷாம் கரனுக்கு தொடர் நாயகன் விருதை வழங்கினர்.

13 விக்கெட்

13 விக்கெட்

சாம்கரன் நடப்பு தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் மூன்று விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். இதனால் ஷாம்கரனுக்கு அந்த விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பைனலுக்கு முன்பு தொடர் நாயகில் விருது குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பட்லர் சூரியகுமார் யாதவ் தான் இந்த விருதை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பட்டியலில் யார்?

பட்டியலில் யார்?

இந்தப் பட்டியலில் பட்லர், அலெக்ஸ் ஹெல்ஸ், சாகின் ஆப்ரிடி, சதாப்கான் ,விராட் கோலி , சூர்யகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா ஹசரங்கா ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால் இந்த விருது சாம்கரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய சாம் கரன், முக்கியமான கட்டத்தில் பந்துகளின் வேகத்தை குறைத்து வீசினேன். இதனால் பேட்ஸ்மேன்கள் நான் எந்த மாதிரி பந்து வீசப் போகிறேன் என்று யோசித்தவாறு இருப்பார்கள்.

சாம் கரண் கருத்து

சாம் கரண் கருத்து

அதனால் எனக்கு நிறைய விக்கெட்டுகள் கிடைத்தது. இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவது மிகவும் கடினமானது காரியமாகும். இதற்காக நான் கடுமையான பயிற்சியை மேற்கொண்டேன். ஆட்டத்தின் கடைசி ஓவர் எந்த மாதிரி பந்து வீச வேண்டும் என்று முன்கூட்டியே யோசித்து செயல்பட்டேன் என்று அவர் கூறினார். வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் டி20 உலககோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றது இதுவே முதல் முறையாகும்.

Story first published: Sunday, November 13, 2022, 19:54 [IST]
Other articles published on Nov 13, 2022
English summary
ICC Player of the tournament award for sam curran in t20 world cup 2022 தொடர் நாயகன் விருது கோலிக்கு கிடையாது.. ஐசிசி வைத்த டிவிஸ்ட்.. அப்போ ரசிகர்களின் ஓட்டு?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X