For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாபிரிக்கா பவுலிங்கை புரட்டி எடுத்த சவுமியா.. விக்கெட் எடுக்க டீ காக் செய்த சாகசம்.. வைரல்!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் சவுமியா சர்கார் மிக சிறப்பாக ஆடி இருக்கிறார்.

Recommended Video

சவுமியா சவுமியா சர்கார் விக்கெட் எடுக்க பறந்து கேட்ச் பிடித்த டீ காக்

லண்டன்: தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் சவுமியா சர்கார் மிக சிறப்பாக ஆடி இருக்கிறார்.

உலகக் கோப்பை கிரிகெட் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை 4 உலகக் கோப்பை ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. இன்று இன்னொரு போட்டி நடக்கிறது.

ICC World Cup 2019: A perfect catch by De Kock to send back Soumya Sarkar

இன்று நடக்கும் போட்டி மிக முக்கியமானது ஆகும். மிகவும் வலுவான தென்னாப்பிரிக்கா அணி இளமையான வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

தென்னாபிரிக்கா ஏற்கனவே இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்துவிட்டது. இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. அதன்பின் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி 39.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் தென்னாபிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இன்று தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டிகள் நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் தென்னாப்பிரிக்கா இதில் பச்சை நிற உடைக்கு பதிலாக இன்னொரு ஆடையான மஞ்சள் நிற உடையை உடுத்தி இருந்தது.

வங்கதேசம் பச்சை நிற உடையை உடுத்தி இருந்ததால் தென்னாபிரிக்க ஆடை மாற்றி இருந்தது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே வங்கதேசம் அதிரடியாக ஆடியது. முக்கியமாக வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமீம் இஃபாலும், சவுமியா சர்காரும் மிகவும் அதிரடியாக காட்டினார்கள். தமீம் தொடக்கத்திலேயே அவுட்டாலும், சவுமியா சர்கார் மிகவும் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார்.

அவர் அடுத்தடுத்து பவுண்டர்களை அடித்து 30 பாலில் 9 பவுண்டரியை அடித்து அரை சதத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். உண்மையில், வங்கதேசம் அணி இவ்வளவு சிறப்பாக விளையாடும் என்று யாரும் நினைக்கவில்லை.

இவரது அதிரடியை பார்த்து தென்னாபிரிக்கா வீரர்கள் நடுங்கிப் போனார்கள். இதனால் பவுலர்களை மாற்றி மாற்றி அனுப்பினார் தென்னாபிரிக்கா கேப்டன் டு பிளசிஸ். இந்த நிலையில்தான் கிறிஸ் மோரிஸ் பந்தில் கேட்ச் கொடுத்தார் சவுமியா.

இதற்காக டி காக் பிடித்த கேட்ச் மிக மிக முக்கியமான மற்றும் கடினமான கேட்ச் ஆகும். தாவி குதித்து சாகசம் செய்து அவர் இந்த விக்கெட்டை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த சவுமியா 30 பாலில் 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

Story first published: Sunday, June 2, 2019, 16:46 [IST]
Other articles published on Jun 2, 2019
English summary
ICC World Cup 2019: A perfect catch by De Kock to send back Soumya Sarkar to pavilion.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X