For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ஒரு பொழப்பா பாஸ்.. கோலியிடம் 'பயிற்சி பெறும்' பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர்

மான்செஸ்டர்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள், நாளை மான்செஸ்டர் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் ஆவேச மோதலை நிகழ்த்த உள்ளன. ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், இந்த போட்டியை காண ஆவலோடு வழிமீது விழி வைத்து காத்துக்கிடக்கின்றன.

இரு அணி வீரர்களும், பயிற்சியாளர்களும், பல்வேறு வியூகங்களை தீட்டிக் கொண்டு உள்ளனர். ஒவ்வொரு அணியிலும் உள்ள முக்கிய பேட்ஸ்மேன்களை எப்படி அவுட்டாக்குவது, முக்கிய பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என்று எதிரணியினர் தங்கள் மூளையை கசக்கி யோசித்துக் கொண்டுள்ளனர்.

இப்போதெல்லாம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. வீடியோ பதிவுகளை கொண்டு பேட்ஸ்மேன்களின் பலம் பலவீனத்தை எதிரணியினர் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன் பாபர் ஆசம் வேறு மாதிரி திட்டம் வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு 7, பாகிஸ்தானுக்கு 3...!! இதுதான் இப்போதைய நிலைமை.. எதை சொல்கிறார் கபில்? இந்தியாவுக்கு 7, பாகிஸ்தானுக்கு 3...!! இதுதான் இப்போதைய நிலைமை.. எதை சொல்கிறார் கபில்?

கோலியை நம்பும் பாபர் ஆசம்

கோலியை நம்பும் பாபர் ஆசம்

பாபர் ஆசம், பாகிஸ்தான் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 63 ரன்கள் விளாசி, ஒரு வகையில், பாகிஸ்தான் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாபர் ஆசம் பேட்டிங்கை ரொம்பவே நம்பிக் கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி நிர்வாகம். ஆனால், அவரோ, விராட் கோலியைத்தான் நம்பிக் கொண்டுள்ளாராம்.

வெறியேற்றும் பாபர்

வெறியேற்றும் பாபர்

விராட் கோலி பேட்டிங் ஸ்டைலை, வீடியோவில் பார்த்து, பார்த்து வெறியேத்திக் கொண்டுள்ளாராம், பாபர் ஆசம். பல்வேறு சூழ்நிலைகளிலும், கோலி எப்படி பேட்டிங் திறமையை அட்ஜஸ்ட் செய்து கொண்டு ஆடுகிறார் என்பதை பார்த்து, நானும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன் என்கிறார் இந்த 24 வயது இளம் பாகிஸ்தான் வீரர்.

சாம்பியன்ஸ் டிராபில வின் பண்ணிட்டாங்களாம்

சாம்பியன்ஸ் டிராபில வின் பண்ணிட்டாங்களாம்

பாபர் ஆசம் மேலும் சொன்னதை பாருங்கள்: இந்தியாவை ஐசிசி தொடர்களில் வீழ்த்தவே முடியாது என்ற நிலைமையை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மாற்றினோம். இறுதிப் போட்டியில், இந்தியாவை வெற்றி கண்டோம். அதை உந்துதலாக கொண்டு, நாளைய போட்டியை எதிர்கொள்வோம். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பெற்ற வெற்றி எங்களுக்கு ரொம்பவே நம்பிக்கை கொடுத்துள்ளது.

பயங்கர எதிர்பார்ப்பாம்

பயங்கர எதிர்பார்ப்பாம்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மோதும் போட்டியை உலகமே உற்று பார்க்கும் என்பதால், நாங்கள் தக்க வகையில் தயாராகியுள்ளோம். நான் மட்டுமல்லாது, எல்லா வீரர்களுமே, இந்த போட்டியை எதிர் நோக்கி காத்திருக்கிறோம் என்கிறார், பாபர் ஆசம்.

நம்பர் ஒன் பந்து வீச்சாளர்

நம்பர் ஒன் பந்து வீச்சாளர்

இந்தியாவின் பந்து வீச்சு, உலகின் நம்பர் ஒன் பவுலர், ஜஸ்ப்ரிட் பும்ரா உள்ளிட்டோரால் பலம்மிக்கதாக உள்ளதே, எப்படி அதை எதிர்கொள்ள திட்டம் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, இந்தியா சிறந்த பவுலிங் அணி என்பது உண்மைதான். ஆனால், நல்ல வேகப்பந்து தாக்குதலை தொடுத்த இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் நன்கு விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதனால், இந்திய வேகப்பந்து வீச்சு, தாக்குதலையும் சமாளிப்போம் என்று நம்புகிறோம் என்றார், பாபர் ஆசம்.

Story first published: Saturday, June 15, 2019, 14:00 [IST]
Other articles published on Jun 15, 2019
English summary
Pakistan batsman Babar Azam models himself on Virat Kohli and is preparing for Sunday's high-voltage World Cup clash between the arch-rivals by watching videos of the Indian captain. Babar, who scored a brilliant 63 in Pakistan's victory over England, is a key player for Pakistan as his side seeks its maiden World Cup win over India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X