For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

27 வருடங்களில் நடந்ததே இல்லை.. செமி பைனல் வாய்ப்பை இழக்கும் முக்கிய அணி?.. உலக கோப்பையில் திருப்பம்!

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான அணி ஒன்று செமி பைனல் வாய்ப்பை இழக்க போகிறது என்று கணிப்புகள் தெரிவிக்கிறது.

லண்டன்: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான அணி ஒன்று செமி பைனல் வாய்ப்பை இழக்க போகிறது என்று கணிப்புகள் தெரிவிக்கிறது. இதுவரை நடந்த கிரிக்கெட் புள்ளி விவரங்களை வைத்த இந்த கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இரண்டு அணிகளுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணி இருக்கிறது. அதிரடியாக ஆடி வந்த இங்கிலாந்து அணி கொஞ்சம் கொஞ்சமாக திணற தொடங்கி உள்ளது.

இன்று எப்படி இறங்குவார்கள்.. இந்திய வீரர்கள் எப்படி இருப்பார்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு.. ஏன்? இன்று எப்படி இறங்குவார்கள்.. இந்திய வீரர்கள் எப்படி இருப்பார்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு.. ஏன்?

பட்டியல்

பட்டியல்

தற்போது உள்ள புள்ளி பட்டியலின் அடிப்படையில், ஆஸ்திரேலியா அணி 6 போட்டியில் 5 போட்டியில் வென்று முதல் இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து 5 போட்டியில் 4ல் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஆறு போட்டியில் 4ல் வென்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தியா 4 போட்டியில் 3ல் வென்று 4ம் இடத்தில் இருக்கிறது.

தோல்வி அடிப்படை

தோல்வி அடிப்படை

ஆனால் இங்கிலாந்து அணிதான் டாப் ஆர்டரில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்த அணி ஆகும். ஆஸ்திரேலியா ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா, நியூசிலாந்து இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு செமி பைனல் வாய்ப்பு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

எப்படி குறையும்

எப்படி குறையும்

இங்கிலாந்து அணி அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை சந்திக்க இருக்கிறது. இந்த மூன்று அணிகளும் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனம் என்பது கிரிக்கெட் தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். ஆம் உலகக் கோப்பையில் இந்த மூன்று அணிகளும் இங்கிலாந்தை அடித்து ஓடவிட்ட வரலாறு இருக்கிறது.

எத்தனை வருஷம்

எத்தனை வருஷம்

அதன்படி கடந்த 27 வருடமாக, அதாவது 6 உலகக் கோப்பை போட்டியில் ஒரு முறை கூட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்றது கிடையாது. எவ்வளவு நல்ல வாய்ப்பு கிடைத்தும் கூட, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை இங்கிலாந்து உலகக் கோப்பையில் வீழ்த்தியது இல்லை.

மீண்டும் நடக்கும்

மீண்டும் நடக்கும்

இந்த நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை மீண்டும் வரிசையாக இங்கிலாந்து எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் மீண்டும் இந்த அணிகளிடம் இங்கிலாந்து தோல்வி அடைய போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மிகவும் வலுவாக இருப்பது வேறு குறிப்பிடத்தக்கது .

மோசம்

மோசம்

இந்த மூன்று அணிகளிடம் வரிசையாக இங்கிலாந்து தோல்வி அடைந்தால், புள்ளி பட்டியலில் பெரும்பாலும் 8 அல்லது 7வது இடத்திற்கு செல்லும். ஐந்து தோல்விகளுடன் இங்கிலாந்து அணி செமி பைனல் வாய்ப்பை கூட இழக்கும். அதற்கு பதிலாக பெரும்பாலும் வங்கதேசம் அணி செமி பைனலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 11:33 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
ICC World Cup 2019: England may lose its semifinal chance according to their world cup history against three teams.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X