For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7 வருடம் அவர் தன்னை செதுக்கினார்.. இப்போது மிளிர்கிறார்.. நோ ஹிட் சர்மா முதல் ரோஹித் சர்மா வரை!

இந்த உலகக் கோப்பை தொடர் ரோஹித் சர்மாவிற்கு மிக முக்கியமானது.

லண்டன்: இந்த உலகக் கோப்பை தொடர் ரோஹித் சர்மாவிற்கு மிக முக்கியமானது. தன்னுடைய வாழ்நாள் பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, இந்த முறை கோப்பையை கையில் தூக்கமால் விட மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆடி வருகிறார்.

நேற்று இந்தியா இலங்கை இடையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ரோஹித் சர்மா மொத்தம் 94 பந்துகளில் 103 ரன்கள் அடித்தார்.

இந்த இன்னிங்சில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். இந்த போட்டியில் மடடுமல்ல இந்த தொடர் முழுக்க அவர் இப்படித்தான் ஆடி வருகிறார்.

என்ன டிவிட்

என்ன டிவிட்

2010ல் ரோஹித் சர்மா ஒரு டிவிட் செய்திருந்தார். என்னை ஏன் உலகக் கோப்பை அணிக்கு எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நான் வாயால் பதில் சொல்ல மாட்டேன். அவர்களுக்கு என் பேட் மூலம் பதில் சொல்வேன், என்று கோபமாக போஸ்ட் செய்து இருந்தார். அவரின் அந்த போஸ்ட் பெரிய சர்ச்சையானது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அந்த வருடம் அவர் சரியாக ஆடவில்லை. இதனால் 2011 உலகக் கோப்பை தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இதனால் வருத்தமாக டிவிட் செய்த ரோஹித் சர்மா, நான் ஏன் தேர்வாகவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இது எனக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பது உறுதி. நான் இதை கடந்த வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆம் கடந்து வந்தார்

ஆம் கடந்து வந்தார்

ஆம் அதன்பின் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்த தவறுகளை சரி செய்து கொண்டே வந்தார். டிவிட்டரில் கோபம் கொள்வதை குறைத்து கொண்டு தனது ஆட்டத்தில் கவனத்தை செலுத்தினார். புதிய பயிற்சியாளரை நியமித்து பயிற்சி முறைகளை மாற்றினார். அது அவருக்கு நன்றாகவே உதவியது. 2013ம் வருடம் வந்தது. அதுதான் அவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

சாம்பியன்ஸ் கோப்பை

சாம்பியன்ஸ் கோப்பை

அந்த வருடம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினார். அது இந்திய அணிக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தவானும், ரோஹித்தும் சேர்ந்து அந்த வருடம் காட்டு காட்டு என்று காட்டினார்கள். ரோஹித் சர்மாவின் செகண்ட் இன்னிங்ஸ் அங்கிருந்துதான் துவங்கியது.

அதிரடி காட்ட தொடங்கினார்

அதிரடி காட்ட தொடங்கினார்

அன்றிலிருந்து அவர் அதிரடி துவங்கியது. 3 இரட்டை சதங்கள், 3 வருடங்களில் 17 சதங்கள் என்று வேகமாக அடித்து ஆட தொடங்கினார். ஆனாலும் அவரிடம் ஒரு தொடர் கன்சிஸ்டன்சி குறைந்தது. விராட் கோலியிடம் இருக்கும் அந்த கன்சிஸ்டன்சி இவரிடம் குறைந்தது. அதையும் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்தார். இது இப்போது இந்த உலகக் கோப்பையில் புதிய ரூபம் எடுத்துள்ளார்.

எப்படி ஆட்டம்

எப்படி ஆட்டம்

உலகக் கோப்பையில் இந்த தொடரில் மட்டும் இவர் 5 சதம் அடித்துள்ளார். ரோஹித் சர்மா எப்போதும் தொடக்கத்தில் மெதுவாக ஆட கூடியவர். 130 பந்துகளில் சதம் அடித்துவிட்டு, அடுத்த 50 பந்தில் இரட்டை சதத்தை தொடக்கூடிய திறமை கொண்டவர்தான் ரோஹித் சர்மா. ஆனால் அவர்இந்த உலகக் கோப்பையில் அப்படி ஆடுவதில்லை. 2வது ஓவரில் இருந்தே ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வருகிறார்.

மாஸ்

மாஸ்

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக ஆட தொடங்கும் ரோஹித் வந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துகளை எல்லாம் எளிதாக எதிர்கொள்கிறார். ஒரு காலத்தில் தான் திணறிய பவுன்சர் பந்துகளை புல் ஷாட் மூலம் சிக்ஸர் பறக்க விடுகிறார்கள்.இந்த தொடரில் அவர் உலகின் எந்த சிறந்த பவுலரையும் விட்டு வைக்காமல் அடித்தார்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

மலிங்கா, ஸ்டார்க், ரபாடா, வஹாப் மற்றும் அமீர் பந்துகளை கூட ரோஹித் சர்மா புரட்டி எடுத்தார். அதேபோல் ஹசன் அலி, சதாப் கான், ரஷீத் கான் என்று ஸ்பின் பவுலர் பந்துகளையும் பறக்கவிட்டார். எங்கள் பவுலிங் ஆர்டர் மிகவும் வலுவானது என்று கூறிய எல்லா கிரிக்கெட் அணிகளையும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்து இருக்கிறார். முக்கியமாக கோலி கூட திணறிய போட்டிகளில் கூட பவுலர்களில் ரோஹித் துவைத்து தொங்க போட்டார்.

8 வருடம்

8 வருடம்

கடந்த 8 வருடங்களில் ரோஹித் சர்மா நீண்ட தூரம் கடந்து வந்திருக்கிறார். முன்பு எல்லோரும் கிண்டல் செய்த நோ ஹிட் சர்மா கிடையாது இவர். உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனான ஹிட் மேன் ரோஹித் சர்மா இவர். இந்த முறை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் கண்டிப்பாக அதற்கு ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருப்பார். கண்டிப்பாக அவர் மஞ்சள் கோப்பையை கையில் ஏந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Story first published: Sunday, July 7, 2019, 17:56 [IST]
Other articles published on Jul 7, 2019
English summary
ICC World Cup 2019: From No Hit Sharma to Hit Man Sharma, Rohit writes his own script.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X