For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் ரகசியமோ.. நீங்க இறுதிப்போட்டிக்கு வரணும்.. ஐசிசி அழைத்த முக்கிய வீரர்.. அதிரடி பிளான்?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட இளம் வீரர் ஒருவரை ஐசிசி தற்போது இறுதிப்போட்டிக்கு அழைத்துள்ளது.

Recommended Video

WORLD CUP 2019 BAN VS WI | மே.இந்திய தீவுகளை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்ட இளம் வீரர் ஒருவரை ஐசிசி தற்போது இறுதிப்போட்டிக்கு அழைத்துள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடர் பல விசித்திரங்களை கொண்டது. பல புதிய வீரர்களை இந்த தொடர் உலகிற்கு அறிமுகம் செய்தது. அதே சமயம் பல முக்கிய வீரர்கள் இந்த தொடரில்தான் ஓய்வை அறிவித்தனர்.

ஆனால் ஒரு வீரர் இந்த தொடர் முழுக்க தனி ஆளாக ஆதிக்கம் செலுத்தினார். தொடரில் தன்னுடைய அணி சரியாக விளையாடவில்லை என்றாலும், அவர் மட்டும் தனித்து திறமையாக ஆடினார். வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்தான் அந்த வீரர்.

அப்படியே மெதுவா ஓடி வந்து.. பும்ரா மாதிரியே பவுலிங் போடும் பாட்டி..! தெறிக்க விட்ட வைரல் வீடியோ அப்படியே மெதுவா ஓடி வந்து.. பும்ரா மாதிரியே பவுலிங் போடும் பாட்டி..! தெறிக்க விட்ட வைரல் வீடியோ

செம பாஸ்

செம பாஸ்

இந்த 2019 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது கண்டிப்பாக ஷாகிப் அல் ஹசன்தான். தனது வங்கதேசம் அணியை தனி ஆளாக வெற்றிகளை நோக்கி தொடர்ந்து நகர்த்தி சென்றவர்தான் ஷாகிப். இந்த தொடர் முழுக்க எல்லா அணிகளுக்கு எதிராகவும் இவர் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் வங்கதேசம் அணி இவரின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

செம பாஸ்

செம பாஸ்

வங்கதேசம் அணியின் மொத்த அழுத்தத்தையும் இவர்தான் சுமந்து விளையாடினார். ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கு பெரிய அளவில் அழுத்தம் இருந்தது. ஆனால் அனைத்தையும் சமாளித்து இவர் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். ஒவ்வொரு போட்டியில் இவர் வெவ்வேறு இடங்களில் களமிறங்கினாலும் பார்ம் போகாமல் ஆடினார்.

மாஸ்

மாஸ்

இந்த தொடர் முழுக்க 9 போட்டிகளில் ஆடிய இவர் 606 ரன்களை எடுத்துள்ளார். இவர்தான் லீக் போட்டிகள் நடந்த வரை இந்த தொடரில் அதிகப்பட்ச ரன்கள் எடுத்த வீரர். 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வங்கதேசம் அணியின் வெற்றிக்கு இவர்தான் பல முறை காரணமாக இருந்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ரோஹித் சர்மா ஆகியோர் கடைசி நேரத்தில் இவரை முந்தினார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் விக்கெட் எடுக்கவில்லை. இவர் மட்டும்தான் விக்கெட்டும் எடுத்து, ரன்களையும் குவித்துள்ளார்.

ஐசிசி அழைப்பு

ஐசிசி அழைப்பு

இந்தநிலையில் ஐசிசி தற்போது இவரை இறுதிப்போட்டிக்கு அழைத்துள்ளது. இங்கிலாந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை காண சிறப்பு அழைப்பு இவருக்கு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

ஒருவேளை இவருக்கு ஆட்டத்திற்கான தொடர் நாயகன் விருது வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஷாகிப் அல் ஹசன் மட்டும்தான் விக்கெட்டும் எடுத்து, ரன்களையும் குவித்துள்ளார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படலாம் என்கிறார்கள்.

Story first published: Sunday, July 14, 2019, 12:57 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
ICC World Cup 2019: ICC invites Shakib Al Hasan to watch the final match creates speculations.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X