For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி தாமதிக்க கூடாது.. நேரம் நெருங்கிவிட்டது.. பரபரப்பை ஏற்படுத்திய மேற்கிந்திய தீவுகள் போட்டி..ஏன்?

நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019: அடுத்தடுத்து சர்ச்சை! பரபரப்பை ஏற்படுத்திய மேற்கிந்திய தீவுகள் போட்டி- வீடியோ

லண்டன்: நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் நடுவர்கள் தவறான தீர்ப்புகளை வழங்கியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக நிறைய பேர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முக்கியமான அணிகள் தோல்வியை தழுவுவதும், சிறிய அணிகள் வெற்றிபெறுவதும் வழக்கமாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று மேற்கு இந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்றது.

என்ன

என்ன

இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. வரிசையாக 100 ரன்களை அடிப்பதற்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதன்பின் ஸ்மித் மற்றும் நாதன் நைல் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி பிழைத்தது. இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் எடுத்தது. நாதன் நைல் மொத்தம் 92 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது.

குறி வைக்கப்பட்டனர்

குறி வைக்கப்பட்டனர்

ஆனால் மேற்கு இந்திய தீவுகள் அணி பேட்டிங் இறங்கியதில் இருந்தே, அம்பயர்கள் தொடர்ந்து தவறான தீர்ப்புகளை வழங்கி வந்தனர். மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஹோல்டருக்கு இரண்டு முறை தவறான விக்கெட் கொடுக்கப்பட்டது. அதன்பின் கிறிஸ் கெயிலுக்கு இரண்டு முறை தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

முக்கியம்

முக்கியம்

முக்கியமாக கெயிலுக்கு முதலில் பேட்டில் படாமலே கேட்ச் விக்கெட் கொடுக்கப்பட்டது. அதன்பின் தவறான எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டையும் ரிவ்யூ மூலம் தவறு என்று நிரூபித்தார் கெயில். அதற்கு அடுத்து 5 வது ஓவரில் ஸ்டார்க் போட்ட நோ பாலில் அம்பயர் நோ பால் கொடுக்க தவறினார். ஆனால் அதற்கு அடுத்த பாலே கெயில் ஸ்டார்க பந்தில் கெயில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். ஆனால் சரியாக அம்பயர் முதல் பால் நோ பால் கொடுத்து இருந்தால், கெயில் அதற்கு அடுத்த பந்தில் (ஃபிரி ஹிட்) அவுட் ஆகி இருக்க மாட்டார்.

மோசம்

மோசம்

அம்பயர்களின் இந்த தவறான முடிவுகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏன் இப்படி மோசமாக அம்பயர் செயல்படுகிறார்கள். அவர்கள் மிகவும் பாரபட்சமாக செயல்பட்டுள்ளனர். இதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது என்று பலர் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் இது மேற்கு தீவுகளுக்கு எதிராக மட்டும்தான் இப்படி நடக்கிறது என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

இதற்கு எதிராக கருத்து கூறியுள்ள மேற்கு இந்திய தீவுகள் வீரர் பொல்லார்ட், ஐசிசி இதுபோன்று தவறாக தீர்ப்பு வழங்கும் அம்பயர்களை உடனே நீக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டது. இனியும் நாம் தாமதம் செய்ய கூடாது, என்று மிகவும் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, June 7, 2019, 9:37 [IST]
Other articles published on Jun 7, 2019
English summary
ICC World Cup 2019: It is the time to change umpires, former players blast poor umpiring against West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X