For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நானா அப்படி செய்தேன்.. வாய்ப்பே இல்லை.. மீண்டும் நடக்காது.. அடித்து சொல்லும் கோலி.. என்ன நடந்தது?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் செமி பைனல் போட்டியில் முக்கியமான அதிசயமான நிகழ்வு ஒன்று நடக்க வாய்ப்புள்ளது.

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | மீண்டும் வில்லியம்சன் - கோலி! என்ன நடந்தது?- வீடியோ

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் செமி பைனல் போட்டியில் முக்கியமான அதிசயமான நிகழ்வு ஒன்று நடக்க வாய்ப்புள்ளது.

இன்று நடக்கும் செமி பைனல் போட்டி பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தொடர் முழுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இன்று செமி பைனலில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதேபோல்தான் 2008 அண்டர் 19 உலகக் கோப்பை மலேசியாவில் நடந்தது. அந்த தொடர் முழுக்கவும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது.

யார் கேப்டன்

யார் கேப்டன்

இந்திய அணியை அப்போது மீசை முளைக்காத சிறுவன் கோலி வழிநடத்திக்கொண்டு இருந்தார். ஆம் கோலி தலைமையில் இந்தியா அந்த அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடியது. அந்த தொடரில் இந்தியா செமி பைனலில் எதிர்கொண்ட அணி நியூசிலாந்து. அப்போது நியூசிலாந்து அண்டர் 19 அணியின் கேப்டனாக இருந்தது இப்போது நியூசிலாந்து சீனியர் அணியின் கேப்டனாக இருக்கும் அதே கேன் வில்லயம்சன்தான்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இரண்டு அணிகளுக்கும் இடையில் செமி பைனல் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 41 ஓவரிலேயே 197 ரன்கள் எடுத்தது. கடைசியில் மழை குறுக்கிட்டதால் , இந்திய அணி டிஎல்எஸ் முறையில் வெற்றிபெற்றது.

கோலி சூப்பர்

கோலி சூப்பர்

இந்த போட்டியில் கோலி 43 ரன்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது மட்டுமே அன்று அவர் ஆட்டநாயகன் விருது வாங்க காரணமாக இருக்கவில்லை. அந்த போட்டியில் கோலி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார் . 7 ஓவர் போட்ட அவர் 27 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் கேன் வில்லியம்சன் விக்கெட்டும் அடக்கம்.

வாவ் செம

வாவ் செம

2008 அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியாதான் கைப்பற்றியது. 11 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியா நியூசிலாந்து அணிகள் செமி பைனலில் உலகக் கோப்பையில் மோதுகிறது. அப்போது அண்டர் 19 கேப்டன்களாக இருந்தவர்கள் கோலி - வில்லியம்சன்தான் இப்போது சீனியர் அணிகளுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். இதைவிட இந்த தொடரில் வேறு என்ன ஆச்சர்யமான விஷயம் நடக்க முடியும்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதை குறித்து செய்தியாளர் சந்திப்பில் நேற்று கோலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில், நீங்கள் மீண்டும் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோலி, என்ன முன்பு நான்தான் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தேனா. அட.. ஆனால் மீண்டும் அவர் விக்கெட் நான் எடுப்பேனா என்று தெரியாது. அது நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

என்ன அனுபவம்

என்ன அனுபவம்

மேலும், அவருடன் விளையாடியது நல்ல அனுபவம். அந்த நாட்கள் மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் இருவரும் அப்போது அண்டர் 19 அணியின் கேப்டன்களாக இருந்தோம். இப்போது இருவருமே சீனியர் அணிக்கு கேப்டன்களாக இருக்கிறோம். இதை இரண்டு பேருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டோம்.

நியூசிலாந்து முக்கியம்

நியூசிலாந்து முக்கியம்

நான் நியூசிலாந்து உடன் நடக்கும் போட்டியின் போது கேன் வில்லியம்சனிடம் இதை நினைவு படுத்துவேன். அவரும் நானும் ஒன்றாக விளையாடிய நாட்களை நினைவுபடுத்துவேன். பல வருடத்திற்கு பின் இப்படி ஒரு போட்டி மீண்டும் நடப்பது சிறப்பான விஷயம்தான் என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Tuesday, July 9, 2019, 13:27 [IST]
Other articles published on Jul 9, 2019
English summary
ICC World Cup 2019: Kohli and Kane Williamson will meet in the world cup after 11 years today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X