நாங்கள் உங்களை மாதிரி இல்லை.. அதை மட்டும் செய்யவே மாட்டோம்.. இந்திய ரசிகர்களை சீண்டிய பாக். கேப்டன்

Sarfaraz Ahmed| நாங்கள் உங்களை மாதிரி இல்லை... இந்திய ரசிகர்களை சீண்டும் பாக். கேப்டன்

லண்டன்: களத்தில் எப்போதும் சில விஷயங்களை செய்யவே மாட்டோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது தெரிவித்துள்ளார். இந்திய ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக அவர் பேசியுள்ளார்.

அப்போது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் முதல் லீக் போட்டியில் மோதியது. இந்த போட்டியில் கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது பவுண்டரிக்கு அருகே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங் செய்து இருந்தார்.

அப்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் ஸ்மித்தை மோசடி நபர், மோசடியாளர் என்று கிண்டல் செய்தனர். இதை பார்த்ததும் கோலி கோபம் அடைந்தார்.

தவானுக்கு பதிலா இவர எடுங்க...!! இல்லைன்னா அவரு கிரிக்கெட் வாழ்க்கையே முடிஞ்சிடும்..!!

என்ன பேசினார்

என்ன பேசினார்

வேகமாக ரசிகர்களிடம் சென்ற கோலி, ஸ்மித்தை பார்த்து அப்படி கத்த வேண்டாம். அவருக்காக கை தட்டுங்கள், என்று குறிப்பிட்டார். கோலியின் இந்த செயல் பெரிய வைரலானது. கோலிக்கு ஆதரவாக உலகம் முழுக்க பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கோலி சிறந்த வீரர் என்பது மட்டுமில்லாமல், சிறந்த மனிதர் என்பதையும் நிரூபித்துவிட்டார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கேள்வி

கேள்வி

இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் இந்திய கேப்டன் கோலி ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆதரவாக பேசினார். அவர் இந்திய ரசிகர்களை ஸ்மித்தை பாராட்டும்படி கூறினார். இதை எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள். உங்கள் நாட்டு ரசிகர்கள் அப்படி செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். நீங்கள் அதை தடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் அளித்த சர்ப்ராஸ், நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் நாட்டு மக்கள் அப்படி கிண்டல் செய்ய மாட்டார்கள். பாகிஸ்தானியர்கள் அப்படி ஒரு விஷயத்தை ஒரு போதும் செய்யவே மாட்டோம். நாங்கள் அதில் உறுதியாக இருக்கிறோம்.

மாட்டோம்

மாட்டோம்

அதேபோல் நாங்கள் எல்லோரும் கிரிக்கெட்டை காதலிக்கிறோம். ஒரு கிரிக்கெட் ரசிகர் அப்படி செய்ய மாட்டார். எங்களுக்கு பிடித்த வீரரை நாங்கள் பாராட்டுவோம். அவ்வளவுதான் களத்தில் எங்கள் வேலை. நாங்கள் எங்களுக்கு பிடித்த அணியை புகழ்ந்து பேசுவோம். வேறு யாரையும் தாழ்த்தி பேச மாட்டோம், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வைரல்

வைரல்

சர்ப்ராஸ் இப்படி சொன்னது இந்திய ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சர்ப்ராஸ் இந்தியர்களை அவமரியாதையாக பேசி இருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர் எங்களை தவறாக மதிப்பிட்டுவிட்டார் என்று எல்லோரும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் என்று சர்ப்ராஸ் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC World Cup 2019: Our fans won't act like Indians says Sarfaraz Ahmed on Steve Smith troll controversy.
Story first published: Wednesday, June 12, 2019, 13:46 [IST]
Other articles published on Jun 12, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X