For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிதான் நாகினி டான்ஸ்.. விஸ்வரூபம் எடுத்திருக்கும் வங்கதேசம் டீம்.. இதுதான் வெற்றிக்கு காரணம்!

Recommended Video

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வங்கதேச கூட்டணி

லண்டன்: நேற்று உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழத்தியதன் மூலம் வங்கதேசம் மிக முக்கியமான அணியாக மாறி இருக்கிறது.

நாகினி டான்ஸுக்கு புகழ் பெற்ற வங்கதேசம் அணி, தன்னுடைய அணியை மிக சிறப்பாக தயார் செய்து வைத்துள்ளது. பார்மில் இருக்கும் வீரர்களை எல்லாம் தூக்கி அணியில் போட்டு, மிக சிறப்பான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பி உள்ளது.

நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் வங்கதேசம் ஆடியது கெட்ட ஆட்டம். இன்னும் நிறைய அதிர்ச்சிகளை தருவதற்கு இவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

டாஸ் சொதப்பல்

டாஸ் சொதப்பல்

நேற்று நடந்த போட்டியில் முதலில் ஆடும் அணி அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் மாறும் என்பதால் இரண்டாவது ஆடும் அணி சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கணிப்புகள் வெளியானது. ஆனால், தென்னாபிரிக்கா அணி டாஸ் வென்றும் கூட பவுலிங்கைத்தான் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. எந்த தென்னாபிரிக்க வீரரின் பவுலிங்கையும் அந்த அணி மதிக்கவில்லை. வரிசையாக எல்லோரின் ஓவரில் பவுண்டரிகளை பறக்கவிட்டார்கள். தொடக்க வீரர் தமீம் இக்பால் மட்டும் 16 ரன்களில் அவுட்டானார்.

என்ன ஸ்கோர்

என்ன ஸ்கோர்

அதன்பின் முக்கியமாக வங்கதேச வீரர்கள் சவுமியா சர்கார் 42 ரன்கள் எடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 75 ரன்கள் எடுத்தார். முஷ்பிகிர் ரஹீம் 78 ரன்கள் எடுத்தார். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த வங்கதேச வீரர்கள் பெரிதும் கஷ்டப்பட்டார்கள். மஹ்மதுல்லா 46 ரன்கள் எடுத்தார். இதில் மஹ்மதுல்லா விக்கெட் ஆகாமல் வேறு இருந்தார்.

சூப்பர்

சூப்பர்

மொத்தமாக 50 ஓவர் முடிவில் இதனால் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 330 ரன்களை எடுத்தது. இதன் பின் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும் டு பிளசிஸ் 62 ரன்கள் எடுத்தார். டுமினி, மார்க்கரம் 45 ரன்கள் எடுத்தனர். மில்லர் 38, டுஸ்சென் 41 ரன்கள் எடுத்தனர்.

எப்படி தோல்வி

எப்படி தோல்வி

முக்கியமான வீரர்கள் எல்லோரும் நல்ல ரன்கள் எடுத்தாலும், யாரும் பெரிதாக பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவிற்கு களத்தில் நிற்கவில்லை. ஆனாலும் கூட தென்னாபிரிக்கா அணியால் 50 ஓவரில் 303 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதனால் வங்கதேசம் அணியிடம் தென்னாபிரிக்கா அணி மோசமாக தோல்வியை தழுவியது.

எப்படி முக்கியம்

எப்படி முக்கியம்

முக்கியமாக களமிறங்கிய வங்கதேச வீரர்கள் எல்லோரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியிட்டார்கள். வங்கதேச வீரர்கள் சவுமியா சர்கார், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகிர் ரஹீம், மஹ்மதுல்லா ஆகியோர் அணிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறார்கள்.

முக்கியமான அணி

முக்கியமான அணி

அதேபோல் வங்கதேசம் பவுலிங்கும் மிகவும் வலுவானதாக இருக்கிறது. ரஹ்மான், ஸைபுதீன், மெஹிடி ஹசன், அல் ஹசன் ஆகிய எல்லோரும் மிகவும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் தற்போது மிக மிக முக்கியமான அணியாக உருவெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 3, 2019, 12:00 [IST]
Other articles published on Jun 3, 2019
English summary
ICC World Cup 2019: Reason behind Bangladesh victory against South Africa.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X