For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 முகத்தை தெரியாது என்றார்.. பதிலடி கொடுத்த ஒற்றை முகம்.. ஆட்டத்தை மாற்றிய மலிங்காவின் அந்த பால்!

லண்டன்: இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மலிங்கா போட்ட 10 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது.

இந்த உலகக் கோப்பை தொடர் பல்வேறு ஆச்சரியங்களை சுமந்து இருக்கிறது என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு மிக முக்கியமான உதாரணம் நேற்றுதான் நிகழ்ந்தது.

எல்லோரும் நேற்று போட்டியில் இங்கிலாந்துதான் வெற்றிபெறும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், பாகிஸ்தான் மட்டுமல்ல நாங்களும் கூட யூகிக்க முடியாத அணிதான் என்று கூறி, இலங்கை நேற்று இங்கிலாந்தை வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்துள்ளது. லண்டன்: இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மலிங்கா போட்ட 10 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது.

இந்த உலகக் கோப்பை தொடர் பல்வேறு ஆச்சரியங்களை சுமந்து இருக்கிறது என்று பலர் கூறுவது உண்டு. ஆனால் அதற்கு மிக முக்கியமான உதாரணம் நேற்றுதான் நிகழ்ந்தது.

எல்லோரும் நேற்று போட்டியில் இங்கிலாந்துதான் வெற்றிபெறும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், பாகிஸ்தான் மட்டுமல்ல நாங்களும் கூட யூகிக்க முடியாத அணிதான் என்று கூறி, இலங்கை நேற்று இங்கிலாந்தை வீழ்த்தி சூரசம்ஹாரம் செய்துள்ளது.

இயான் மோர்கன்

இயான் மோர்கன்

சரியாக ஒரு வாரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனிடம் பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்டார். உங்கள் அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இருக்கிறார். அவர்தான் இந்த உலகக் கோப்பையில் சர்ப்ரைஸ் தேர்வு என்று கருதலாமா என்று கேட்டார். ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி நேரத்தில் வாய்ப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பதில்

என்ன பதில்

இதற்கு பதில் சொன்ன மோர்கன், அப்படி எல்லாம் இல்லை. இலங்கையில் அணியில் 10 புது முகங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இதற்கு முன் விளையாடியதே இல்லை. நான் 10 வருடமாக விளையாடுகிறேன். அவர்களை பார்த்ததே இல்லை. என்னை பொறுத்தவரை அவர்கள்தான் சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்று ஏளனமாக குறிப்பிட்டார். இது இலங்கை ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியது.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் மோர்கன் முக்கியமான விஷயம் ஒன்றை மறந்துவிட்டார். 10 முகங்களை தெரியாது என்று கூறிய மோர்கனுக்கு ஒற்றை முகம் பதில் சொல்லி இருக்கிறது. அந்த ஒற்றை முகம் கர்லி முடி வைத்த மலிங்காவுடையது. ஆம்.. இலங்கையில் 10 புதிய முகங்களுக்காக ஒரு பழைய முகம் பதிலடி கொடுத்து இருக்கிறது.

செம

செம

நேற்று மலிங்கா போட்ட 10 ஓவர்கள்தான் இங்கிலாந்து அணியை மொத்தமாக வீழ்த்தி, இலங்கை அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இங்கிலாந்தின் வலிமையான ஜானி பிரைஸ்டாவை டக் அவுட் செய்து வீட்டிற்கு அனுப்பினார் மலிங்கா. ஆனால் அந்த சம்பவம் அடுத்து வரப்போகும் சம்பவங்களின் சிறிய தொடக்கம்தான்.

மரணம்

மரணம்

மலிங்காவின் தொடர் யார்க்கர்களால் இங்கிலாந்து அணி திணறிப்போனது. யாரிக்கர்களில் பல வகை இருக்கிறது என்று கூறிய மலிங்கா நேற்று அனைத்து வகை யார்க்க்கர்களையும் இங்கிலாந்துக்கு போட்டு ஷோ காட்டினார். இதன் பயன் கை மேல் கிடைத்தது. ஆம் 6 வது ஓவரில் இங்கிலாந்தின் இன்னொரு தொடக்க வீரர் வின்சும் மலிங்கா பந்தில் அவுட்டாகி வெளியே போனார்.

செம வலிமை

செம வலிமை

18 வது ஓவரில் வலிமையான மோர்கனை உடானா காலி செய்ததும் இலங்கை ரசிகர்கள் நிமிர்ந்து உட்காரா தொடங்கினார்கள். அப்போதுதான் போட்டியின் முக்கிய டிவிஸ்ட் நடந்தது. 30 வது ஓவரை மலிங்கா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் நிதானமாக ஆடி வந்த ஜோ ரூட் வாகாக வந்த மலிங்கா பந்தை மேலே தூக்கி சுற்றினார். பந்தோ வந்துட்டேன் மாமா என்று வேகமாக பெரேரா கையில் போய் தஞ்சம் அடைந்தது.

மொத்தமாக முடிந்தது

மொத்தமாக முடிந்தது

57 ரன் அடித்த ரூட் அவுட்டான பின் மொத்தமாக போட்டி கை மாறியது. அதன்பின் இங்கிலாந்தின் கடைசி ஆயுதமான ஜோஸ் பட்லரையும் 32.3 ஓவரிலேயே காலி செய்தார். அவ்வளவுதான். 10 ஓவர் போட்டு 4 விக்கெட் எடுத்து வெறும் 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து புதிய சாதனை படைத்தார். மலிங்காவின் சிறப்பான உலகக் கோப்பை ஸ்பேல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .

மாஸ் பாஸ்

மாஸ் பாஸ்

இதனால் 239 ரன்கள் எடுத்த இலங்கை எளிதாக 219 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டி சாதனை செய்து இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இங்கிலாந்தின் டாப் ஆர்டரை நிலை குலைய வைத்த மலிங்காவின் பவுலிங்தான். முக்கியமாக 30.3 ஓவரில் ஜோ ரூட்டை காலி செய்த அவரின் ஒற்றை பால்தான்!

Story first published: Saturday, June 22, 2019, 8:05 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
ICC World Cup 2019: The legend Malinga - How Eoin Morgan forgot one face of Sri Lanka team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X