For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் வருகிறார்.. இந்திய அணி காலிதான்.. கோலியின் திட்டங்களை தவிடுபொடியாக்க ஆஸி களமிறக்கும் வீரர்!

லண்டன்: இந்தியாவிற்கு எதிராக நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா மிக முக்கியமான திட்டம் ஒன்றை செயல்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எல்லோரும் எதிர்பார்க்கும் அந்த போட்டி நடக்க போகிறது.. ஆம் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி இன்று நடக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் இது மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் இந்த தொடரை மிகவும் வெற்றிகரமாக ஆடி வருகிறது. இதனால் இன்று நடக்கும் போட்டி யார் வலுவான அணி என்பது கண்டிப்பாக நிரூபிக்கும்.

ஏன் வலுவான அணிகள்

ஏன் வலுவான அணிகள்

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரை அவர்கள் மண்ணிலேயே வென்றது. அதே சமயம் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கடைசி கட்டத்தில் வென்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டு அணிகளும் சமமான பலத்தில் இருக்கிறது என்றே கூறலாம்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணிக்கு எப்படி 4வது இடம் பிரச்சனையாக இருக்கிறதோ அதேபோல்தான் ஆஸ்திரேலியா அணிக்கு 3வது இடம் பிரச்சனையாக இருக்கிறது. ஆம் அந்த அணியின் ஒன் டவுன் வீரர் அத்தனை பலமான வீரராக இல்லை. இதுதான் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு தலைவலியாக உள்ளது.

யார் இருக்கிறார்

யார் இருக்கிறார்

தற்போது ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது வீரராக உஸ்மான் குவாஜா இருக்கிறார். இவர் அந்த அணியின் இளமையான வலுவான வீரர். இவர் 4,5 வது இடத்தில் நன்றாக ஆட கூடியவர். ஆனால் கடந்த சில போட்டிகளில் இவர் 3வது இடத்தில் களமிறங்கி மோசமாக ஆடி வருகிறார். தனது பார்மையும் இவர் தற்போது இழந்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்

இதனால் ஸ்டீவ் ஸ்மித் தனக்கு விருப்பமான மூன்றாவது இடத்தில் களமிறங்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்தில் அதிரடியாக ஆட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உஸ்மானுக்கு அந்த அணி ஓய்வு கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

யார் வருவார்

யார் வருவார்

இதனால் உஸ்மானுக்கு பதிலாக அந்த நான்காவது இடத்தில் ஷான் மார்ஷ் களமிறங்க போகிறார் என்கிறார்கள். இந்தியாவிற்கு எதிராக மார்ஷ் சிறப்பாக ஆட கூடிய வீரர். அதனால் இந்திய பவுலர்களுக்கு எதிராக மார்ஷை துருப்பு சீட்டாக பயன்படுத்த ஆஸ்திரேலியா அணி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

எப்படி அவர்

எப்படி அவர்

மொத்தம் 14 ஒருநாள் போட்டிகளில் மார்ஷ் 537 ரன்களை எடுத்துள்ளார். சராசரியாக 38.34 ரன்களை இவர் எடுத்துள்ளார் . இதில் இரண்டு சதம். மூன்று அரை சதம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா பயன்படுத்த நிறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Sunday, June 9, 2019, 10:13 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
ICC World Cup 2019: What is Australia's plan against the Indian team in today's one to one match?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X