For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்ரான் கான் எங்கிட்ட சொன்னாரு... அதை நான் செஞ்சிட்டேன்...! கவாஸ்கர் ஏன் இப்படி சொல்றாரு?

Recommended Video

Sunil Gavaskar : இம்ரான் கான் சொன்னதால் செய்தேன்... கவாஸ்கர் சொன்ன ரகசியம்- வீடியோ

மும்பை: முன்னாள் கேப்டனும், பாக். பிரதமருமான இம்ரான்கான் சொன்னதால் அதை செய்ததாக இந்திய அணி முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணி குறித்தும், தேர்வுக் குழு குறித்தும் வெளிப்படையான கருத்துக்களை முன் வைத்து கூறி வருகின்றார். தேர்வுக்குழுவை நொண்டி வாத்துகள் என்று காட்டமாகவே விமர்சித்திருக்கிறார்.

இதையடுத்து பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது: 1986ம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது நானும், இம்ரான் கானும் மதிய உணவு சாப்பிட சென்றோம். அந்த நேரத்தில்தான் நான் அவரிடம் ஓய்வு குறித்து பேசினேன்.

இம்ரான் கான்

இம்ரான் கான்

அந்த தொடருடன் எனது ஓய்வை நான் அறிவிக்க முடிவு செய்துள்ளேன் என்று இம்ரானிடம் தெரிவித்தேன். உடனே அவர், இப்போது ஓய்வை அறிவிக்காதீர்கள் என்றார்.

தோற்கடிப்பது நோக்கம்

தோற்கடிப்பது நோக்கம்

தொடர்ந்து என்னிடம் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.அங்கு வந்து இந்தியாவை தோற்கடிப்பதுதான் என் நோக்கம்.

வெளியான அறிவிப்பு

வெளியான அறிவிப்பு

அப்போது இந்திய அணியில் நீங்கள் இல்லை என்றால் சரியாக இருக்காது என்று என்னிடம் கூறினார். அதற்கு நான், இந்த இங்கிலாந்து தொடரின் முடிவில் பாகிஸ்தான் தொடர் குறித்த அறிவிப்பு வெளி வரவில்லை என்றால், நான் ஓய்வு குறித்து அறிவித்து விடுவேன் என்றேன்.

ஓய்வை அறிவிக்கவில்லை

ஓய்வை அறிவிக்கவில்லை

ஆனால், அதற்கு மறுநாளே பாகிஸ்தான் தொடருக்கான அறிவிப்பு வெளியானது. ஆகவே, நான் எனது ஓய்வினை அறிவிக்கவில்லை. அவரிடம் சொன்னபடி ஓய்வினை தள்ளிப் போட்டேன் என்றார்.

Story first published: Tuesday, July 30, 2019, 14:56 [IST]
Other articles published on Jul 30, 2019
English summary
Imran khan told me that, shouldn’t announce retirement in 1986 says sunil gavaskar.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X