
காயம்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரில் இதுவரை இல்லாத அளவு இந்திய வீரர்கள் காயத்தில் சிக்கினர். இந்திய அணியின் பந்துவீச்சு தான் பலம் என நம்பி இருந்த நிலையில், அணியின் ஆறு அனுபவ பந்துவீச்சாளர்கள் காயத்தால் தொடரில் இருந்து பாதியில் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இளம் வீரர்கள்
ஆனாலும், இளம் வீரர்களை கொண்டு அணியை வழிநடத்தி கோலி இல்லாத போட்டிகளில் வெற்றி, டிரா என அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார் ரவி சாஸ்திரி. நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முழு பலத்துடன் ஆடியும், இந்திய அணியை சமாளிக்க முடியவில்லை.

போராட்ட குணம்
முதலில் போராட்ட குணத்தை இந்திய வீரர்கள் மனதில் ஆழமாக விதித்துள்ளார் ரவி சாஸ்திரி. இளம் வீரர்களை உற்சாகமூட்டி அவர்களை சிறப்பாக ஆட வைத்துள்ளார். மேலும், அணியை சிக்கலின்றி நடத்த சில அதிரடி முடிவுகளையும் எடுத்தார்.

துணை கேப்டன் பதவி
குறிப்பாக, ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிய உடன் அவருக்கு துணை கேப்டன் பதவி அளித்து அதிர வைத்தார். அந்த முடிவை அவர் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், கோலி இல்லாத நிலையில் ரஹானேவுடன், ரோஹித் சர்மா இணைந்து பணியாற்றினால் அது அணிக்கு பெரும் பலம் என்பதை உணர்ந்தே அவர் அந்த முடிவை எடுத்தார்.

அவசியம் இதுதான்
பேட்டிங், பந்துவீச்சில் பயிற்சி அளித்தாரோ இல்லையோ, ஆனால் அணி நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறார் ரவி சாஸ்திரி. அதுதான் இந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு அவசியமான ஒன்று. அதை அவர் திறமையாக கையாண்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications