For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு சான்ஸ் கிடைக்கலைனாலும் பரவாயில்லை.. டீமுக்காக ஓடி ஓடி உழைத்த மூத்த வீரர்!

Recommended Video

Ind vs Ban 2nd test | Ashwin motivated Indian fast bowlers

கொல்கத்தா : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு அதிக ஓவர்கள் பவுலிங் கிடைக்கவில்லை. எனினும், அவர் அணிக்காக ஓடி ஓடி சில வேலைகளை செய்தார்.

இந்திய அணி வங்கதேச அணியை புரட்டிப் போட்டு ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

சுழற் பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா இருவரும் சேர்ந்து மொத்தமே 7 ஓவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பந்து வீசினர்.

வேகப் பந்துவீச்சு ஆதிக்கம்

வேகப் பந்துவீச்சு ஆதிக்கம்

இந்தப் போட்டியில் எப்போதும் இல்லாத அளவு இந்திய அணி வேகப் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது. சுழற் பந்துவீச்சாளர்கள் பக்கமே கேப்டன் கோலி திரும்பிப் பார்க்கவில்லை. அந்த அளவுக்கு இந்தப் போட்டியில் எதிரணியின் 19 விக்கெட்களை சாய்த்தனர் வேகப் பந்துவீச்சாளர்கள். மீதம் இருந்த ஒரு வீரர் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்க்ஸ் வெற்றி

முதல் இன்னிங்க்ஸ் வெற்றி

வங்கதேச அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை வெறும் 30.3 ஓவர்களில் முடித்து வைத்தது இந்திய அணியின் மூவர் கூட்டணி. இஷாந்த் சர்மா 5, உமேஷ் 3, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஒரே ஒரு ஓவர்

ஒரே ஒரு ஓவர்

முதல் இன்னிங்க்ஸில் சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு ஒரே ஒரு ஓவர் மட்டும் பந்து வீச வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் கோலி. அஸ்வினுக்கு முதல் இன்னிங்க்ஸில் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இரண்டாம் இன்னிங்க்ஸ் நிலை

இரண்டாம் இன்னிங்க்ஸ் நிலை

இரண்டாம் இன்னிங்க்ஸில் எப்படியும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. இது தெரிந்தே, என்னவோ அஸ்வின் அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என சில வேலைகள் செய்தார். அது சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அஸ்வின் செய்த வேலை

அஸ்வின் செய்த வேலை

இரண்டாம் இன்னிங்க்ஸின் 20வது ஓவரின் போது ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் கால் பதிக்கும் இடத்தில் சேதம் ஏற்பட்டது. அதை மண் கொட்டி சீர் செய்த போது அம்பயருடன் அருகே நின்று, அஸ்வின் அதை சரி பார்த்தார்.

உத்வேகம் அளித்தார்

உத்வேகம் அளித்தார்

அடுத்து வேகப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசிய போது அவர்கள் அருகே ஓடிச் சென்று அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியும், உத்வேகம் அளித்தும் பேசி வந்தார். ஒவ்வொரு அணியிலும் மூத்த வீரர்கள், கேப்டன் இந்த வேலையை செய்வார். அஸ்வின் அணியின் மூத்த வீரராக இந்த பணியை செய்தார்.

5 ஓவர்கள் வீசினார்

5 ஓவர்கள் வீசினார்

பின்னர், கோலி அஸ்வினுக்கு 5 ஓவர்கள் பந்துவீச வாய்ப்பு அளித்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டு, அஸ்வினுக்கு கிடைக்க வேண்டிய விக்கெட்டை கோட்டை விட்டார் துணை கேப்டன் ரஹானே.

இந்திய அணியின் வளர்ச்சி

இந்திய அணியின் வளர்ச்சி

பந்துவீச வேண்டிய அஸ்வினை ஓடி, ஓடி ஆலோசனை கூற விட்டது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் தான். இந்திய அணியின் இந்த "வேகமான" மாற்றம் மிகப் பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, November 24, 2019, 19:05 [IST]
Other articles published on Nov 24, 2019
English summary
IND vs BAN : Ashwin motivated fast bowlers while fielding in second test match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X