ஏங்க.. ஜடேஜா பவுலிங் போட்டதை நீங்க பார்த்தீங்களா? இப்படி பொசுக்குன்னு முடிஞ்சு போச்சே!

IND VS BAN 1ST TEST | ஜடேஜாவிற்கு பந்துவீச வாய்ப்பு இல்லாமல் போன நிலைமை.. காரணம் என்ன ?

இந்தூர் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் ஜடேஜா வெறும் மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்.

ஜடேஜா பந்து வீசுவதை பார்க்க காத்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதற்கு காரணம், கேப்டன் கோலி அல்ல. வங்கதேசம் தான்.

அந்த அணி இந்தியாவுக்கு ஈடு கொடுத்து ஆடும் என எதிர்பார்த்த நிலையில், விரைவாக விக்கெட்களை இழந்து ஆல் - அவுட் ஆனது. மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் கேப்டன் கோலி, ஜடேஜாவை அதிகமாக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.

இவ்ளோ நடந்ததுக்கு அப்புறம் ஒட்டும் வேணாம்.. உறவும் வேணாம்! ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு பிரியும் சீனியர்

முதல் டெஸ்ட் டாஸ்

முதல் டெஸ்ட் டாஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆடுகளம் சில மணி நேரங்கள் வரை வேக ப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனவும், அதன் பின் பேட்டிங் செய்ய ஒத்துழைக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்தியா அசத்தல் துவக்கம்

இந்தியா அசத்தல் துவக்கம்

அதனால், இந்தியாவுக்கு டாஸ் தோல்வி சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், போட்டி துவங்கியது. எனினும், இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசம் பேட்டிங்கில் தடுமாறியது.

விக்கெட் வேட்டை

விக்கெட் வேட்டை

18 ஓவர்களில் வங்கதேச அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தியது இந்தியா. 31 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தவித்தது அந்த அணி. இஷாந்த், உமேஷ், ஷமி என இந்திய அணியின் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும் விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஷமி மிரட்டல் ஓவர்

ஷமி மிரட்டல் ஓவர்

அடுத்து அஸ்வின் நான்காவது விக்கெட்டை வீழ்த்தினார். 53 ஓவர்கள் வரை 5 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது வங்கதேசம். 54வது ஓவரை வீசிய ஷமி கடைசி இரு பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி மிரட்டினார். அந்த ஓவர் திருப்பு முனையாக அமைந்தது.

கலக்கல் பந்துவீச்சு

கலக்கல் பந்துவீச்சு

அதன் பின் விரைவாக கடைசி மூன்று விக்கெட்களை எடுத்த இந்திய அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தியது. இஷாந்த் சர்மா 2, அஸ்வின் 2, உமேஷ் யாதவ் 2, ஷமி 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஜடேஜா ஓவர்கள்

ஜடேஜா ஓவர்கள்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மிரட்டிய நிலையில், அஸ்வின் மட்டுமே சுழற் பந்துவீச்சாளர்களில் பந்து வீசும் வாய்ப்பை பெற்றார். அவர் 16 ஓவர்கள் வீசினார். மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜாவுக்கு மொத்தமே 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு கிடைத்தது.

ரன் அவுட் செய்தார்

ரன் அவுட் செய்தார்

ஜடேஜாவிற்கு ஓவர்களே கொடுக்க முடியாத அளவிற்கு மற்ற பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி வந்தனர். ஜடேஜா எப்போதும் போல சிறப்பாக பீல்டிங் செய்தார். பந்துவீச்சில் அதிக வாய்ப்பு இல்லாத நிலையிலும், பீல்டிங்கில் ஒரு சிறப்பான ரன் அவுட் செய்தார்.

கோட்டை விட்ட கேட்ச்கள்

கோட்டை விட்ட கேட்ச்கள்

முதல் இன்னிங்க்ஸில் இந்திய வீரர்கள் கோலி, ரஹானே, விக்கெட் கீப்பர் சாஹா மொத்தமாக நான்கு கேட்ச்களை கோட்டை விட்டனர். அதில் மூன்று முறை அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச்கள் நழுவ விடப்பட்டன. இத்தனை வாய்ப்பு கிடைத்தும் வங்கதேசம் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விமர்சகர்கள் கருத்து

விமர்சகர்கள் கருத்து

ஜடேஜாவுக்கு வாய்ப்பே கொடுக்காத அளவுக்கு தான் வங்கதேசம் பேட்டிங் ஆடியது என்பது விமர்சகர்கள் குறிப்பிட்டனர். அதனால், இந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெல்ல வாய்ப்பு உள்ளது. மேலும், போட்டி மூன்று நாட்களை தாண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் ஆடி முடித்த உடன் இந்திய அணி பேட்டிங் ஆடத் துவங்கியது. துவக்க வீரர் ரோஹித் சர்மா, 6 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், மயங்க் அகர்வால் 37, புஜாரா 43 ரன்கள் எடுத்து முதல் நாள் முடிவு வரை ஆட்டமிழக்காமல் ஆடினர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : India restricted Bangladesh to 150 runs without using much of Jadeja overs. He just bowled 3 overs.
Story first published: Thursday, November 14, 2019, 18:40 [IST]
Other articles published on Nov 14, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X