யாருய்யா இவரு? மாசா மாசம் டபுள் செஞ்சுரி அடிக்கிறாரு! பிராட்மேனை ஓரங்கட்டி மிரள வைத்த இந்திய வீரர்!

Mayank Agarwal 243 runs vs Bangladesh | Ind vs Ban 1st test day 2 | இரட்டை சதம் அடித்தார் அகர்வால்

இந்தூர் : இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன் முதல் டெஸ்ட் சதத்தை, இரட்டை சதமாக அடித்து சாதித்து இருந்தார் மயங்க் அகர்வால்.

வியப்பு

வியப்பு

தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தன் இரண்டாவது இரட்டை சதம் அடித்து மிரட்டி இருக்கிறார். "இவர் என்ன? மாதா மாதம் இரட்டை சதம் அடிக்கிறார்?" என வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது, வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியால் நிலைத்து ஆட முடியவில்லை. வெறும் 150 ரன்களுக்கு, இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களிடம் சரண் அடைந்தது.

இந்தியா ஆட்டம்

இந்தியா ஆட்டம்

அடுத்து இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது. துவக்கத்தில் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் - புஜாரா பொறுப்பாக ஆடி முதல் நாள் வரை அடுத்த விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

தப்பிய மயங்க்

தப்பிய மயங்க்

மயங்க் 32 ரன்கள் அடித்து இருந்த போது, ஸ்லிப்பில் எளிதான கேட்ச் ஒன்றை கொடுத்தார்.அதை கோட்டை விட்டது வங்கதேசம். அது எத்தனை பெரிய தவறு என்பது தற்போது மயங்க் அடித்த இரட்டை சதம் மூலமாக தெரிய வந்துள்ளது.

இரட்டை சதம் கடந்தார்

இரட்டை சதம் கடந்தார்

சதம் கடந்து அதிரடி ஆட்டத்துக்கு மாறிய மயங்க் அகர்வால், சிக்ஸ் அடித்து இரட்டை சதம் கடந்தார். பின்னர், முச்சதத்தை நோக்கி இன்னும் அதிரடியை கூட்டிய அவரம் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் கேட்ச் கொடுத்து 243 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நீளும் சாதனைகள்

நீளும் சாதனைகள்

குறுகிய காலத்தில் இரண்டு இரட்டை சதம் அடித்துள்ள மயங்க் அகர்வால் ஏராளமான சாதனைகளை உடைத்துள்ளார். பல சாதனைப் பட்டியலில் தன் பெயரை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் ஆடத் துவங்கிய காலத்தில் இருந்து பார்த்தால், உலகின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அவருக்கு போட்டியாக ரன் குவித்து வருகிறார்.

குறைந்த இன்னிங்க்ஸ்

குறைந்த இன்னிங்க்ஸ்

குறைந்த இன்னிங்க்ஸில் தன் முதல் இரண்டு இரட்டை சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் வினோத் காம்ப்ளிக்கு (5 இன்னிங்க்ஸ்) அடுத்த இடத்தில் இருக்கிறார் மயங்க் (12 இன்னிங்க்ஸ்). டான் பிராட்மேன் 13 இன்னிங்க்ஸில் தான் இரண்டு இரட்டை சதங்களை அடித்தார். அதை முறியடித்து இருக்கிறார் மயங்க்.

ஒரே ஆண்டில் இரண்டு

ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் இரட்டை சதம் அடித்த இந்தியா துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் மயங்க் அகர்வால் மட்டுமே. அதிலும் மயங்க் அகர்வால் வெவ்வேறு டெஸ்ட் தொடர்களில், அடுத்தடுத்த மாதங்களில் இரண்டு இரட்டை சதம் அடித்துள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை

தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் நிலையில், இந்த நீண்ட தொடரில் முதல் முறையாக இரண்டு இரட்டை சதம் அடித்த வீரர் மயங்க் அகர்வால் தான். ஸ்டீவ் ஸ்மித், ரோஹித் சர்மா, கோலி, மயங்க் அகர்வால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.

வங்கதேச அணிக்கு எதிராக..

வங்கதேச அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், கோலிக்கு பின் மூன்றாவதாக இணைந்துள்ளார் மயங்க் அகர்வால்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs BAN : Mayank Agarwal hit second double century in two months. He also beat Don Bradman record for fastest two double centuries.
Story first published: Friday, November 15, 2019, 17:56 [IST]
Other articles published on Nov 15, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X